பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

161

முத்துக் கோப்பவர்களும், மணிமாசு நீக்குவோரும், வளையை அறுத்து அணிகள் செய்வோரும் இருக்கும் தெருக்கள் அரசன் முன்னிலையில் நின்று வணங்கும் சூதர், இருந்து வணங்கும் மாகதர், அரசர் புகழ் பாடும் வைதாளிகர், நாழிகை கூறும் நாழிகைக் கணக்கர், சாந்திக் கூத்தர் மதங்கள், களத்தாடும் கூத்தியர் கணிகையர் பரிசங்கொள்ளும் விலைமாதர் குற்றேவல் செய்யும் ஏவல் மகளிர், தோற்கருவி, துளைக் கருவி, உருக்குக் கருவி முதலியவற்றை வாசிப்போர், போர்ப்படைக்கும், திரு விழாக்களுக்கும் பறை கொட்டுவோர், நகை வேழம்பர் முதலியோர் தத்தம் பிரிவின் நிலை தெரியும்படி வாழுமிடங்கள் குதிரைப்பாகர், யானைப்பாகர், தேர்ப்பாகர், கடுங்கண் மறவர் ஆகிய இவர்கள் அரண்மனைப் புறத்தைச் சுற்றியுள்ள இடங்கள் ஆகிய இவை அனைத்தையும் உட்கொண்டு பெருஞ்சிறப்புடன் விளங்கியது பட்டினப்பாக்கம்9. சிற்சில சாதியாளர்கட்கும் தொழிலாளர்கட்கும் தனித்தனித் தெருக்கள் அமைந்திருந்தன என்பது புலனாகிறது.

ஐவகை மன்றங்கள்

மன்றம் என்ற சொல் ஊர் நடுவே பலரும் கூடும் பொது இடம் எனப் பொருள்.20 பட்டினப்பாக்கப் பகுதியில் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் ஐம்பெரும் மன்றங்களும் அமைந்திருந்தன. இம்மன்றங்கள் நகரின் பொது மக்கள் கூடுமிடங்களாக அமைந்திருந்தன என்று தெரிகிறது. அவையாவன :

  1. வெள்ளிடை மன்றம்
  2. இலஞ்சி மன்றம்
  3. பூத சதுக்கம்
  4. நெடுங்கல் நின்ற மன்றம்
  5. பாவை மன்றம் 21