பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

பழமொழி நானூறு மூலமும் உரையும்



188. பகைவர்க்கும் அருளுதல்

பாம்பு, தெளிவாக அடித்துக் கொல்லப்படும் கொடிய தன்மை உடையதே என்றாலும், சான்றோர் கூட்டத்திலே சென்றால், அதுவும்கூடச் சாகாமல் தப்பிவிடும். பகைவர்கள் படும் துன்பத்தைத் தெளிவாக உண்மையெனக் கண்டபோது, மேன் மக்கள், அவர்கள்பாலும் கண்ணோட்டஞ் செலுத்தி உதவவே செய்வார்கள். -

தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள்--தெற்ற நவைக்கப் படுத்தன்மைத் தாயினும் சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு. பகைவர்க்கும் துன்பத்தில் உதவுவது சான்றோர் பண்பு என்பது கருத்து.'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு’ என்பது பழமொழி. அவர், இரக்கத்தால் அதனைக் கொல்லாது போக விடுவர் என்பதாம். . - 188 189. கடனும் கடமையும்

மடமாகிய பண்பினைக் கொண்டவளும், சாயலிலே மயிலைப் போன்றவளுமான பெண்ணே அறிவாற் சிறந்த சான்றோர்கள், கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள், தொடர்ந்து வறுமையுடையவர்களாக இருத்தலால் ஒன்றைச் செய்யவியலாத காலத்தும் செய்யுங்காலம்வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கருதி இருக்க மாட்டார்கள்; அதனை எப்படியும் செய்யவே முற்படுவார்கள். அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் இடங்கண்டறிவாமென் றெண்ணியிராஅர் மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர் . கடங்கொண்டும் செய்வார் கடன். சான்றோர் கடன்பெற்றும் கடமையைச் செய்பவர் என்பது கருத்து. கடமையில் தவறாத அவர் பண்பு சொல்லப் பட்டது. சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன்’ என்பது பழமொழி. கடம்-பாலை நிலமும் ஆகும். அதனைக் கடந்துபோயும் கடமையைச்செய்வர் என்பதும்பொருந்தும்.189 190. பகையை முதலில் நலியச்செய்தல்

இயல்பாகத் தன்னுடைய பகையினை வெல்ல நினைப் பவன், தனக்குப் பாதுகாப்பாக, முன்னர் அயலாக அவருக்குள்ள