பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

பழமொழி நானூறு மூலமும் உரையும்



படத்தோன்று நல்லாய்! நெடுவேல் கெடுத்தான் குடத்துளும நாடி விடும். பொருளைத் தொலைத்தவன் ஒருவன், நம்மீதும் சந்தேகப்படுகிறானேயென்று அவன்மீது ள்வரும் ஆத்திரம் கொள்ளக் கூடாது' என்பது கருத்து.'நெடுவேல் கெடுத்தான் குடத்துளும் நாடிவிடும் என்பது பழமொழி. தொலைத்தவன் மனநிலை இதுதான். 279 280. உயர்குடியினரின் ஒழுக்கம்! -

முற்றிய தென்னையின் காய்கள், வயலினிடத்தே உதிர்ந்து விழுகின்ற நீர்வளமுடைய ஊரனே! சிறந்த தொடர்ச்சியினை உடையவர்களாக விளங்கித் தொன்மையான குடியிலேயும் தோன்றியவர்கள், நல்ல ஒழுக்கம் உடையவர்கள் ஆகவும் ஒழுகிவருதல், அவருக்கு மேலும் சிறப்புத் தருவதாகும். அது, நெய்யினிடத்தே பாலைக் கொட்டிவிடுதல் போன்றதாகும். விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார் ஒழுக்குடையர் ஆகி ஒழுகல்-பழத்தெங்கு செய்தலை வீழும் புனலூர அஃதன்றோ நெய்த்தலைப்பால் புக்கு விடல். 'உயர்குடியினரும், ஒழுக்கம் உடையவராக இருந்தால் அவர் சிறப்பு மேலும் உயரும் என்பது கருத்து.'நெய்த்தலைப் பால் உக்குவிடல் என்பது பழமொழி. உக்குதல்-சிந்துதல்.280 281. அரசாங்க மதிப்பு -

ஆராய்ந்த நல்ல மென்மையான கூந்தலை உடையவளே! விசாரித்துப் பார்ப்போமானால், முதலில் நெய்யிட்டு வந்த பாத்திரமே பின்னரும் நெய்யிடப்பட்டதாக வந்து சேரும்.அது போலவே, அரசனாற் சிறந்தோர் என மதித்து விரும்பப்பட்ட வர்களை, ஏனைய மக்களும், தாமும் அவ்விடத்தே விருப்பங் கொண்டு, நன்கு மதித்துப் போற்றி உணர்வார்கள் என்று அறிவாயாக.

வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக் கொண்டேனை மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர்- ஆய்ந்த நலமென் கதுப்பினாய்! நாடின் நெய்பெய்த கலனேநெய் பெய்து விடும்.

அரசினால் மதிக்கப்பட்டவரை அனைவரும் போற்றி மதிப்பார்கள் என்பது கருத்து. அரசால் மதித்துப் பாராட்டப்