பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

149



'பிறரைக் கள்ளராச்செய்குறுவார்’ என்பது பழமொழி'தான் திருடி பிறரை நம்பாள் என்பது கிராமத்துப் பழமொழி. 306

307. பேதையர் நட்பு - -

தம்முடைய நண்பர் ஒருவர்மீது சிலர் பழியான செய்தி

களைச் சொன்னால், மேன்மக்கள், இவர் அவரோடு விரோதம் உடையவர் போலும் என்று கருதுவார்களே அல்லாமல், அப்படிச் சொன்னவற்றை ஆராய்ந்து பார்க்கக் கூட நினைக்க மாட்டார்கள். கீழ்மக்களோ, தமக்கு முன்னேநின்று கூறுகின்ற கோளையே உண்மையென நம்பிவிடுவார்கள்.அதனால் பேதை மக்களுடைய நட்பு முடிவிலே துன்பமாகவே முடியும் என்றறிக

. இடையீடு உடையார் இவரவரோடு என்று

தலையாயர் ஆராய்ந்து காணார்--கடையாயார் முன்னின்று கூறும் குறளை தெரிதலால் பின்னின்னா பேதையார் நட்பு.

சிநேகிதனின் மீது எவரோசொல்லும் பழிச்சொல்லைக் கேட்டு அவற்றை உண்மையென உணரும் பேதைமாக்களின் நட்பு என்றும் துன்பமே தரும் என்பது கருத்து. பின்னின்னா பேதையார் நட்பு என்பது பழமொழி. - 307

308. பொருளும் காவலும் - -

புலி வந்து தங்கியிருந்தால் அதனால் அந்தப் புதருக்கும் வலிமையாகவே இருக்கும். அப்படியே, அந்தப் புதரின் காரணமாகப் புலிக்கும் வலிமை அதிகமாயிருக்கும். ஒன்றுக்கு ஒன்று பாதுகாப்பாக இரண்டும் விளங்கும். அதுபோல, தன்னிடத்தே உள்ள பொருளைப் பேணிக் காப்பவன் அதற்கு உடையவனாகச் சிறப்படைவான்; அந்தப்பொருளோ தன்னை உடையவனான அவனை வறுமையினின்று காப்பதாகவும் விளங்கும்

உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே உடையானக்ை காப்பது உம் ஆகும்--அடையின் புதர்க்குப் புலியும் வலியே; புலிக்குப் புதரும் வலியாய் விடும். 2. பொருளை ஒருவன் சிதறாது பேணிக் காத்தால், அப்படிக் காத்த பொருள், அவன் வாழ்வைச் சிதறவிடாமல் காத்து உதவும் என்பது கருத்து. ‘புதர்க்குப் புலியும் வலியே; புலிக்குப் புதரும் வலியாய் விடும்’ என்பது பழமொழி. பொருளுக்கு அவன் காப்பு; அவனுக்குப் பொருள் காப்பு என்பதாம். 308