பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பழமொழி என்றால், பழைமையான மொழி என்றும்;

முதுமொழி என்றும்; பட்டறிவு மொழி என்றும் பொருள்கள் கொள்ளலாம். - -

பழங்காலத்திலிருந்து பேசப்பட்டு வருகின்றது; அதனால்

இது பழமொழி. .

மிகவும் மூத்தமொழி - முதுமை வாய்ந்த மொழி - மூத்தோர்

சொன்னமொழி - அதனால் இது முதுமொழி. -

. பழங்காலத்தில் சொல்லப்பெற்றாலும், மூத்தோர். உரைத்த மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியும் அவரவர் வாழ்க்கையில் அவரவர் பட்டு அறிந்து சொன்ன பட்டறிவு மொழிகளே.

இந்தப் பழமொழிகள் - பட்டறிவு மொழிகளாக விளங்குவதனால், அவை நம் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக்கொள்ள உதவும் ஊன்றுகோல்களாக இப்பழமொழிகள் நமக்கு உதவும்.

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இது வழக்கத்தில் இருப்பதனால் - அவரே -

"நுண்மையும் சுருக்கமும் ஒளியுமுடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப" என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

பழமொழிகளைப் பலர் பேச்சு வழக்கிற் பயன் படுத்திக்கொண்டிருந்தனர்; பயன்படுத்துகின்றனர். பலர் கட்டுரைகளாகத் தீட்டினர். முன்றுறை அரையனார் என்ற புலவர் வாழ்க்கைக்கு நன்மை பயக்கின்ற பழமொழிகள் நானுறைத் தேர்ந்தெடுத்து ஒரு பழமொழியை வைத்து ஒரு