பக்கம்:பவள மல்லிகை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - . பவள மல்லிகை

புதமான சிற்பங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். என்ன அழகு! என்ன அழகு! அங்கிருத்த சுனேயைப் பார்த்த போதுதான் சங்க நூல்களில் வரும் வருணனைகள் எனக்கு விளங்கின. "சுற்பகம் அனேயஅக் கவிஞர் நாட்டிய, சொற் பொரு ளாமெனத் தோன்றல் சான்றது” என்ற கம்பர் வாக்குத் தெளிவாயிற்று. இனிமையாக அங்கே பொழுது போக்கினுேம், அந்தக் குகைச் சிற்பங்களைப் பொருளாகக் கொண்டு அன்று ஒரு கதையை நண்பர்களுக்குச் சொன் னேன். அந்தக் கதை, வண்ணம் பூசாத சித்திரம் போல என் உள்ளத்தின் மூலையிலே கிடந்தது. போன வருஷ ஆனந்தவிகடன், தீபாவளிமலருக்குக் கதை வேண்டுமென்ற கடிதம் வந்தபோது, அதை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வந்து புது மெருகிட்டுக் கதையாக்கினேன். அது தான் 'ரத்தக் கண்ணிர்.'

பஞ்சகல்யாணிக் குதிரை முதலிய மூன்றும், கதை எழுதவேண்டும் என்ற சங்கற்பத்திலே தோன்றியவை. மத னகாமராஜன் கதைப்பாணியிலே எழுதவேண்டுமென்ற எண் ணம், பஞ்சகல்யாணிக் குதிரையை ஒடவிட்டது. ஆனந்த விகடன் தீபாவளி மலருக்காக எழுதின கதை; ஆகையால் கடைசியில் ஒற்றை வெடியைக் கொண்டு வந்தேன்.

என் கண்பர் ஒருவர் தம்முடைய காரை ஒரு குதிரை வண்டியின்மேல் மோதவிட்டார். நடுநடுங்கிப் போய் ஐந்து ரூபாய் கோட்டை வண்டிக்காானிடம் வீசிவிட்டு வந்தார். வந்தது முதல் அவர் உள்ளம் படபடத்தது. இதுவரை யில் இந்த அநுபவம் இல்லையாகையால் அவர் கடுங்கிக் கொண்டே இருந்தார். அவருடைய நடுக்கத்தையும், கீழே விழுந்தவர்கள் என்ன செய்து விடுவார்களோ என்று அஞ் சின அச்சத்தையும் நான் நேரிலே உணர்ந்தேன். இது சில வருஷத்துக்கு முன் நிகழ்ந்தது. யார் தெய்வம்' என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/130&oldid=592258" இலிருந்து மீள்விக்கப்பட்டது