பக்கம்:பவள மல்லிகை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூன் பாண்டியன்

கழுத்தில் ருத்திராட்ச மாலையும் நெற்றியில் விளக்க மான திருநீறும் அணிந்து கொண்டு தூய்மையான ஆடை களுடன் அமர்த்து வைத்தியநாத முதலியார் தேவார பாராயணம் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலே நீராடி விட்டுப் பூஜை செய்து தேவார பாராயணம் செய்வது.முதலியார் வழக்கம். பரம்பரைச் சைவாகிய அவருக்குச் சைவத்தில் அழுத்தமான பற்று. தேவாா பாராயணம் பண்ணும்போது அதில் மனம்அழுந்தி ஈடுபடுவார். சில சமயங்களில் உள்ள்ம் உருகிக் கண்ணிர் விடுவார். - . • - - - புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

நின்னடி என்மனத்தே வழுவா திருக்க வாந்தர வேண்டும்' என்று மெல்ல ராகம் போட்டுப் படிக்கும் போது அவருடைய தொண்டையில் களகள சப்தம் உண்டாகும். வார்த்தை தடுமாறும். கண்ணில் குபுக்கென்று ர்ே கொப்புளிக்கும். மேலே பாட முடியாமல் தத்தளிப் பார். உண்மையாகவே தெய்வத் திருவருளில் எம்பிக்கை யும் தேவார திருவாசகத்தில் பெருமதிப்பும் உடையவர்; இளகிய உள்ளம் உடையவர். ஆதலால் தேவாரத்தில் இப் படிச் சில இடங்கள் விரும்போது அவர் உருகுவார்.

இன்று இப்போதுதான் பாராயணம் செய்ய ஆசம் பித்திருக்கிருர் கண் தேவார புத்தகத்தில் சென்ருலும், வாய் பழக்கத்தால் ராகம் போட்டுப் படித்தாலும், அவர் கருத்து எப்போதும் போல அந்தப் பாட்டின் பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/24&oldid=591958" இலிருந்து மீள்விக்கப்பட்டது