பக்கம்:பவள மல்லிகை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o பவள மல்லிகை

டிலே இருக்க வேண்டும். இதோ முன்னலே, பழக்கத் தாலே தாத்தா என்று அழைக்கும் குழந்தை இருக்கிறதே என்ருல், இது கொண்டாடும் இடத்தில் வந்து பழகும் குழந்தை; அவ்வளவுதான். - - வைத்தியநாத முதலியார் அகக் கண்ணில் முத்து தோன்றின்ை. எத்தனை ஆசையாக வளர்த்தார்! வளர்ந்த குழந்தைக்கு ஏதாவது குறை இருந்ததா? அப்பொழு தெல்லாம் அவருடைய ஜவுளிக் கடைக்கு மகோன்னத காலம். லக்ஷ்மி தாண்டவமாடிக் கொண்டிருந்தாள். குழந்தைக்கு எதில் குறை வைத்தார்? குழந்தை வளர்ந்து வரவர், அதற்குக் கல்வி புகட்டின மாதிரியில்தான் ஏதா வது குற்றம் உண்டா? ஐந்து வயசில் தோடு கூற்றுப் பித்தா மூன்றும் குழந்தைக்குச் சொல்லி வைத்தார். அந்த மூன்று தேவாரப் பதிகங்களின் முதல் பாட்டுகளே முத்து பாடும்போது முதலியார் சாக்ஷாத் சிவலோகத்தில் இருப்பதாகவே எண்ணிக்கொள்வார். குழந்தையின் எழி அலும் அறிவும் வளர்ந்து கொண்டு வந்தன.

இப்போது கினைக்கிருர், எதற்காகப் பாழும் கோணல் எழுத்தைச் சொல்லிக் கொடுக்கச் செய்தோம் என்று. எதையும் விடாமற் பற்றிக்கொள்ளும் அறிவுடைய முத்து வுக்கு வீட்டிலேயே வந்து வாத்தியார் சொல்லித் தந்தார். பிறகு பள்ளிக்கூடம் போனன். கல்வி அவனுக்கு விளையாட் டாகத்தான் இருந்தது. ஹை ஸ்கூலுக்குப் போனன்; படித்தான்; தேர்ச்சி பெற்றன். அந்த மட்டிலாவது சிறுத்தியிருக்கக் கூடாதா? காலேஜ் படிப்புப் படிக்க வேண்டுமென்று முதலியாருக்கே ஆசை தோன்றிற்று. இவ்வளவு இளமையில் விறுவிறென்று கல்வியில் ஏறி வரும் அவனைத் திடீரென்று நிறுத்துவது பாவம் என்று வினைத்தார். படித்து என்ன செய்யப் போகிருன்சி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/28&oldid=591962" இலிருந்து மீள்விக்கப்பட்டது