பக்கம்:பவள மல்லிகை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பவள மல்லிகை

களின் நடத்தையும்' என்று அவர் பொதுவாகவே பேசி ஞர். உள்ளுக்குள் மாத்திரம் முத்துவின் கிராப்புத்தலை அவர் அகக் கண்ணை உறுத்தியது.

"நாம் என்னவோ அப்படித்தான் எண்ணிக்கொண்டு அப்பாவியாக இருக்கிருேம். நீங்கள் இங்கே திருச்சியில் இருந்துகொண்டு காவிரி ஸ்நானமும் தாயுமானவர் தரிசன முமே கதியென்று ஒரு நாளைப்போலவே ரெயில் தண்ட வசனத்தில் போகிறமாதிரி கடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சேர்ந்தவர்களெல்லாம் அப்படியே இருப்பார் கள் என்பது என்ன உறுதி'

அவர் எதையோ மனசில் வைத்துக் கொண்டு பேசு கிருரென்பது தெளிவாகத் தெரிந்தது. அந்தத் தொனி யிலே இருந்த எளனக் குறிப்பு வைத்தியநாத முதலியாரின் உள்ளத்தை அறுத்தது. - -

“அது கிடக்கிறது. ஊரில் எல்லோரும் கேமங் தானே? நம் பையனை எப்போதாவது பார்க்கிறதுண்டா? என்று பேச்சை வேறு பக்கத்தில் திருப்புபவரைப் போல முதலியார் கேட்டார். வந்தவரோ அதைத்தானே எண் னிப் பேசிக்கொண்டிருக்கிருர்? “உங்கள் பையன? அவன் எதற்கு என் கண்ணில் தென்படுகிருன்? காலேஜில் படிக் கப் போய்விட்டால் அப்புறம் அவர்களெல்லாம் கக் கருவ ஜாதியோடு சேர்த்தி. ஒட்டு உறவென்பதெல்லாம் அவர் களுக்கு இல்லை. அப்படி இருந்தாலும் அதற்கு நேரமேது? படிப்பைத் தவிர்த்து மற்ற விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. போதாக் குறைக்குக் காலேஜில் வயசு, வந்த பெண்களும் சேர்ந்து படிக்கிரு.ர்கள். அவர்கள் மனசுக்கும் அறிவுக்கும் வேலை எவ்வளவு அதிகமாக இருக். கும், பார்த்துக் கொள்ளுங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/32&oldid=591966" இலிருந்து மீள்விக்கப்பட்டது