பக்கம்:பவள மல்லிகை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தக் கண்ணிர் 73

வேண்டுமென்ருல் கொஞ்சம் பண உதவியும் செய்யலாம். இப்போது நான் சொல்லும் காரியத்தின் பெருமை எல் லோருக்கும் தெரியாது. இங்கே என் கனவு பூர்த்தியாகு மால்ை மும்பையிலிருந்து தினந்தோறும் மக்கள் இங்கே வந்து இன்புறும் காலம் வரும்.”

'கடக்காத காரியத்தைப் பற்றி நாலு நாள் பேசி லுைம் பயன் இல்லை. ஏதோ நாலில் ஐந்தில் நாம் இப் படியே வந்து விட்டுப் போவோம். அதுதான் இப்போது சாத்தியம்; மற்றதெல்லாம் ஆகாசக் கோட்டை." --

“ஒரு நாள் நம்முடைய மாமனையும் இங்கே அழைத்து வந்து காட்ட வேண்டும்” என்ருன் லேன். மாமன் என்றது தங்கத்தின் தந்தையையே.

'மாமன் என்ன? தங்கத்தையும் சேர்த்து அழைத் துக் கொண்டு வரலாம்.'

இந்தப் பேச்சு முதலில் விளையாட்டாகவே ஆரம்ப மாயிற்று. அப்புற்ம் காரியமாகவே ஆயிற்று. அடுத்த தடவை அவர்கள் யானைத் தீவுக்கு வரும்போது தங்கமும் அவள் தகப்பனும் வந்தார்கள். . - - தங்கம் வந்து பார்த்தாள். ஆஹா அவள் அடைந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வது? "அப்பா, இந்த மாதிரி இடத்தில் கம் ஆயுள் முழுவதுமே இருத்து விட லாம் என்று தோன்றுகிறது' என்ருள். .

“இங்கேயா? மழைக்கும் காற்றுக்கும் என்ன செய் வாய்? சோற்றுக்கும் துணிக்கும் என்ன செய்வது?" என்று கேட்டான் தந்தை. - - 'சோறு துணி மும்பையிலிருந்து வாங்கி வரு கிருேம். அதோ அந்தப் பாறைகளைக் குடைந்தால் அழ கான குகைகளை அமைத்து விடலாம். பிறகு மழைக்கும் காற்றுக்கும் பயம் எதற்கு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/79&oldid=592123" இலிருந்து மீள்விக்கப்பட்டது