உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம் "சர்வநாசம் சம்பவிக்கும்! 35 சர்வேஸ்வரனின் கோபத்துக்கு ஆளாவீர்! என்று கூடத்தான் சொன்னோம்." 'வெள்ளத்தை, வைக்கோற் போர்களைப் போட்டுத் தடுக்க முயற்சித்தோம்.. பலன்... 'பூஜ்யம்தான்! ஏன் மக்கள் மனதிலே பயம் தோன்ற வில்லை... கீறின கோட்டைத் தாண்டினால் ரௌரவாதி நரகம் சம்பவிக்கும் என்று நம்பி, நடு நடுங்கிக் கொண்டி ருந்த மக்கள், இப்போது நிமிர்ந்து நிற்கிறார்கள் - நாம் அதிகமாக அதட்டினால், புருவத்தை நெறிக்கிறார்கள்- இப்படி ஆகிவிட்டதே நிலைமை.. முன்பெல்லாம், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியுடைய லீலாவினோதங்களைப் பற்றிய திருக் கதைகளைக் கூறினால், எவ்வளவு பக்தி சிரத்தை யோடு கேட்பார்கள்- எவ்வளவு உருகுவார்கள்-கோபால கிருஷ்ணன் குழவை எடுத்தார், அதரத்தில் வைத்தார் மதுரகீதம் பொழிந்தார். கீதம் கேட்டதும். கொல்லவந்த புலியும்,சாக இருந்த பசுவும்,அம்பு எய்திடச் சென்ற வேடனும், அவனால் இறந்திட இருந்த பறவையும்,சகல ஜீவராசிகளும் பிரம்மானந்தமடைந்தன என்று கூ கூறின போது, எவ்வளவு குதூகலமடைந்தார்கள்- கோவிந்த நாமத் தைப் பஜித்தார்கள்...’ " கோபிகைகளுடன் கண்ணன் பிருந்தாவனத்திலே ஆடிப்பாடி இருந்த ஆனந்தக் காட்சியை வர்ணித்தபோது, மக்களின் முகமெலாம், செந்தாமரையாகிவிடும்...' " காணிக்கை குவியும் - பூஜைகளோ அமோகம் - பூதேவர் என்ற பெயருக்கு ஏற்றபடியான நிலைமை நமக்கு அந்தப் பொற்காலம் போயே விட்டதே!' "வேள்வி என்றால், வீண் என்கிறார்கள்! யாகப்பசு என்று கேட்டால், ஜீவ இம்சை என்கிறார்கள்-தானம் என்று கேட்டால், அதிகாரப் பிச்சையா என்று மிரட்டுகிறார்கள், தவசிகள் என்று சொன்னால், எதைத்துறந்தீர்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/36&oldid=1637222" இலிருந்து மீள்விக்கப்பட்டது