உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம் 47 கேட்பீர். நான் கூறுமுன்னர், நீவிர் சற்று எண்ணிப் பாருமின். டாக்டர் இந்தத் திங்கள், பல்வேறு இடங்களிலே பட்டமளிப்பு விழாச்சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன. ஜெயகர், பேராசிரியர் ஜா. பண்டித குன்சுரு முதலிய அறிஞர் பலர், வடநாட்டிலே, பட்டமளிப்பு விழாச் சொற் பெருக்காற்றினார்கள். படிப்பிலும் பாராளுந் திறனிலும், மேலானவர்களான இம்மேதாவிகள், தேசிய சர்க்காரின் அவசியத்தைப் பற்றியே பெரிதும் வலியுறுத்திப் பேசினர். தேசீயம், ஏன் இங்கு சரியான முறையிலே கமழவில்லை என்ற ஆராய்ச்சியிலேயோ அவர்கள் புகவில்லை. ஏகாதிபத்தி யத்தைக் கண்டிப்பது எளிது; கண்டிக்கவேண்டிய அளவு கசப்பு வளர்ந்துவிட்டதை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் கண்டனத்தோடு நின்றுவிடாமல், நோய் போக எம்மருந்து உட்கொள்வதென்றுரைக்கும் நேர்மையும் நெஞ்சழுத்தமும், அந்தப் படிப்பாளிகட்கு இல்லையோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது. சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சாடினார், சர்ச்சிலுக்குச் சூடெழ. அமெரிக்காவுக்கு அழுகை கிளம்பக் கூடிய விதத்திவே! "தன் மானம் உண்டு எனக்கு! எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் திலே நமக்கிருக்கும் அந்தஸ்துக் குறித்து மகிழ முடியாது. நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் புகழ்பாட முடியாது. எந்த ஆப்பிரிக்க மண்ணிலே என் இனத்தவரின் இரத்தம், போரிலே சிந்தப்படுகிறதோ, அதே ஆப்பிரிக்காவிலேயே அவர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டும், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்துக்கு லாலி பாட மனம் வருமோ! மனம் முறிந்து விட்டது அன்பர்களே!' என்று சர் சண்முகம் கூறியிருப்பது கேட்டு, அறிவும் தன்மானமும் உள்ள எவர்தான், 'சபாஷ்!' என்று கூறார்? ஆனால், இந்தப் பகுதி எனக்குப் புளகாங்கித மூட்டவில்லை. ஏனெனில், கண்ணியத்துடனும் காரணத்துடனும், கம்பீரமாகச் சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போக்கைக் கண்டித்தார். ஆனால், இதனினும் கடுமையாகவும், நரகல் நாடையில், பிரிட்டிஷ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/48&oldid=1637234" இலிருந்து மீள்விக்கப்பட்டது