பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

 "பகலவனே, காற்றைக் காட்டிலும் நான் தான் வலுவானவன். இந்த உண்மையை நீ காற்றுக்கு எடுத்துக் கூறு” என்று கூறியது பனிக்கட்டி.

பகலவன் அவற்றைப் பார்த்துச் சிரித்தது.

"ஏன் வீண் சண்டை போடுகிறீர்கள். அசையும் தன்மையை வைத்துப் பார்த்தால் காற்றுத் தான் வலுவானது. அசையாத தன்மையை வைத்துப் பார்த்தால் பனிக்கட்டி தான் வலுவானது. உண்மை யிப்படி யிருக்க நீங்கள் ஏன் ஓயாமல் சண்டை போடுகிறீர்கள்?" என்று கேட்டது கதிரவன்.

"கதிரவனே நீ சொல்லது சரியல்ல. அசையாத பனிக்கட்டியை நான் அசைத்து விடுவேன்” என்றது காற்று.

"முடியாது! முடியவே முடியாது!” என்று கூறியது பனிக்கட்டி, கதிரவன் முன்னிலையிலேயே அவை மீண்டும் சச்சரவு செய்யத் தொடங்கின.

“உங்களுக்குள் ஏன் வீண் சண்டை? ஒரு போட்டி வைத்துப் பார்த்து விடலாமே!” என்று கூறியது பகலவன்.