பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சொத்துக்களைக் காப்பாற்ற முடியாமல், துன்பப் படுவானே என்று நினைத்துப் பார்க்கவே அவருக்கு வருத்தமாய் இருந்தது.

இதே கவலையாய் அவர் நோய் உற்றுப் படுத்துவிட்டார்.

அவரை ஊர் பெரிய மனிதர்கள் பலர் வந்து,பார்த்தும் போயினர். அவர் உடம்பை ஆய்ந்து பார்த்த மருத்துவர், அவருக்கு உடல் நோய் எதுவும் இல்லை என்றும், மனநோய் தான் அவரை வருத்துகிறது என்றும் கூறினார். உடனே அந்தப் பெரியவர்கள் அவருடைய மனக்கவலை என்ன என்று கேட்டார்கள். தன் மகனைப் பற்றிய கவலையை அவர் வெளியிட்டார்.

ஒரு பெரிய மனிதரிடம் அவர் இவ்வாறு கூறினார்.

"ஐயா, என் மகன் சோம்பேறியாய் இருப்பது தான் எனக்குக் கவலையளிக்கிறது. என்றாவது ஒரு நாள் என் மகன் உழைத்துப் பொருள் ஈட்டி ஒரு ஐந்து ரூபாய் கொண்டு