பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொச்சைப் பொழுதுபோக்கு மொழியாக மட்டுமே உள்ளது. வளரிளங் குழந்தைகளுக்குக் கூட இனிய எளிய தமிழ்ப்பாடல்கள் கற்பிக்க வாய்ப்பில்லை. இன்னும் ஐம்பதாண்டுகளில் ‘டமிளர்’கள் இருப்பார்கள், வாயில் 'டமிங்கலம்' வாழும். இந்நிலை மாற வேண்டும் எனும் வேட்கையே இச்சிறுநூல். இது வீட்டிலுள்ள தாய்மார்களுக்குதவும் கையேடாகும். இப்பாடல்கள் சிலவற்றை இசைப் பேழையாக்கும் திட்டம் உள்ளது.

‘பள்ளிப் பறவைகள்’ நூலின் முன்னுரையில் பாட்டும் கதையும் குழந்தைகளுக்குப் பாலும் சோறும் எனப் பாவலரேறு குறித்துள்ளமையால் இப்பாடல் தொகுப்பு பாச்சோறு எனப் பெயர்பெறலாயிற்று. அந்நூல் முன்னுரையின் அருமையும் பயனும் கருதி அம்முன்னுரையே இந்நூலுக்கும் முன்னுரையாகக் கொடுக்கப் பெற்றுள்ளது.

தங்கள் திருமணத்தின் போது பாவலரேறு அவர்களின் ‘தமிழா எழுச்சிகொள்’ நூலினை வெளியிட்டு மகிழ்ந்த வெள்ளிங்கிரி - பத்மாவதி இணையர், தம் மகள் மலர்விழி - இரமேசுகுமார் திருமணத்தையொட்டி இந்நூலை வெளியிட முன்வந்தமைக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியன. இதனைத் தொகுக்க உதவிய திருப்பூர் ப. துரையரசன், பல்லடம் செ. திருமேனி, சீனி. செந்தேவன் ஆகிய தமிழ் நெஞ்சங்களுக்கும் வெளியிட இசைவு தந்த பாவலரேறு குடும்பத்தார்க்கும் விரைந்து அச்சிட்டு வழங்கிய திலகா மறுதோன்றி அச்சகத்தார்க்கும் நன்றி.

திருப்பூர் வெளியீடு : திருவள்ளுவர்

2.7.2006 கல்விப்பணி அறக்கட்டளை

8

பாச்சோறு