பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. அமர் விளைந்தது 235

பதியும் பிற்கட்டும் பரிகளி லேறி ஒருவரும் அறியா வகை பறிய வானுர். பாசறையில் பண்டங்கள் பல படிந்து கிடக்தன. போராட மூண்டு வந்தவர் மாருகி மீண்டு ஓடியது இகழ்ந்து கிரிக்கும் வகையில் நீண்ட வசைபாப் நிலவி கின்றது. ஈண்டு எதிர்ந்து பொருத வீரர் பலர் மாண்டு படினும் இறுதியில் கிடைத்த வெற்றி எல்லார்க்கும் உறுதி தக்து உவகை புரிக்கது.

வெள்ளையத் தேவன் விளிந்தது.

இவன் உள்ளத் துணிவும் ஊக்கமும் உடையவன். கல்ல போர் விரன். மறவர் மரபினன், கொண்டையங் கோட்டையார் என்னும் பிரிவைச் சேர்க்கவன். ஜமீன்காரிடம் பேரன்புடைய வன். அவருடைய குறிப்பறிக்தி காரியங்களை எவ்வழியும் செவ் வையாச் செய்து வந்தான் ஆகலால் இவன் மேல் அவர் மிகுக்க பிரியமும் மதிப்பும் வைத்திருந்தார். தகுந்த ஆதரவோடு நிலமும் பொருளும் உதவி இவனே நன்கு பேணி வந்தார். வெள்ளை என்றே செல்லமா இவனே அவர் அழைத்து வருவது வழக்கம். கும்பினியாருடைய பகை மூண்ட பின்பு மன்னன் ஒருநாள் மனம் கவன்றிருந்ததை இவன் அறிந்தான்; எதிரே வந்தான்; ஒணங்கி கின்ருன் மகாராஜா இந்த வெள்ளையன் ஒருவன் இங்கே இருக்கும்போது அந்த வெள்ளையர் வத்து என்ன செய்ய முடியும்? சமுகம் யாதும் கவலை கொள்ள வேண்டாம்; பிள்ளை யவர்கள் செய்த பிழையால் பெரும்பகை மூண்டுள்ளது; வகு வது வாட்டும்; உள்ளம் கவலாமல் உவந்திருங்கள்” என்று உறுதியோடு ஊக்கி மொழிந்தான். இவனுடைய உரைகளைக் கேட்டதும் து: ) பெரு மகிழ்ச்சி அடைந்தார். இன்னவா.மு. பல வகையிலும் உரிமையோடு இவன் உதவி புரிந்து வந்தான். பாஞ்சைப் பதியும் இவன் மேல் வாஞ்சை மீதுளர்க்கிருக்தார்.

அன்று மூண்ட போரில் இவன் புரிக்க ஆண்டகைமை அதிசயம் உடையது; கும்பினிப் படைகள் கோட்டையை வளைந்து கொண்டவுடனே இவன் உள்ளக் துணிந்து ஊக்கி எழுக்

தான். கச்சை வரிந்து கட்டி உடைவாள் பூட்டிக் கையில் கூரிய