பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அதனை ஏன் அத்தனை அபா; ஈரமானதாகக் கருதினார்கள் கான் றெல் நாம் நம் முன் கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள் வீகளுக்கு விடை காண்பதன் மூலமே பாரதியின் இவ்விரு நூல்களையும் ஆங்கிலேய அரசாங்கம். தடை செய்து பறி முதல் செய்தததற்குப் பிரதான காரணம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கெல்லாம் விடை காண்பதற்கு, நாம். சில சரித்திர' 'உ ண்மைகளையும் பின்னணிகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். அந்த உண்மைகள் என்ன? தீவிரத் தேசியவாதத் தலைவர்களும் புரட்சி இயக்கமும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்த நூற்றாண்டின் தொடக் கத் தில் இந்தியாவில் ஆங்கிலேய 'மன்னரின் ராஜப் பிரதிநிதியாக, வைஸ்ராயாக இருந்து இந்தியாவை ஆண்டுவந்த லார்டு கர்ப்ான் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் அன்றைய மிதவாதிகளான இந்தியத் - தேசியத் தலைவர்களும் கூடச் சகித்துக்கொள்ளக்கூடிய தாக இருக்கவில்லை, உதாரணமாக, இந்தியா தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகப் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் வாடி வதங்கிக் கொண்டிருந்த சமயத்தில், ஏழாவது எட்வர்டு. மன்னரின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு, ஏராளமான் பணத்தை வாரியிறைத்து, ஒரு கோலாகலமா ன தர்பாரை லார்டு கர்ஸான் 1903ஆம் ஆண்டு ஜனுவரி முதல் தேதியன்று நடத்தினான், இதனைக் கண்டு ராஜவிசுவாசிகளான இருந்த மிதவாதத் தலைவர்களே கொதித்தெழுந்தனர், " டில்லியில் நடந்தது காரனேஷன் தர்பார் அல்ல; அது. கர்ஸானரேஷன் தர் பார்! என்று மிதவாதியான அன்றைய காங்கிரஸ் தலைவர் - லால் மோகன் கோஷ் குறிப்பிட்டார். இதன் பின் கர்ஸான் அநாவசியச் மாகத் திபெத்தின் மீது படையெடுத்தான். இதனாலும் இந்தியாவுக்கு "ஏகப்பட்ட செலவு ஆயிற்று. இதுவும் தென்பாதத் தலைவர்களுக்குப் பொறுக்கவில்லை. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், லார்டு ஜர்ஸான் 1995ஆம் ஆண்டில், வங்காளத்தை இந்து வங்காளம், முஸ்லீம் வங்காளம் என்று . வகுப்புவாத அடிப்படையில் பிரிக்கக் சூழ்ச்சி செய்து, வங்காள மாகாணம் ஒரே ஒரு - கவர்னரால் ஆ6: முடியாத அளவுக்கு மிகப் பெரியதாக இருப்பதாக, நிர்வாக அடி. <di படையில் ஒரு நொண்டிச்சாக்கினைக் கூறி, அந்த மாகாணத்தை இரண்டாகப் பிரித்தான்.