பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஜப்பான் பெற்ற இந்த வெற்றியரானது, தம்மை அடிமை கொண்டுள்ள ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து, அடிமைப் பட்டுக் கிடந்த ஆசிய மக்களும் போராட முடியும், விடுதலை பெற முடிக்கிம் என்ற நம்பிக்கையை, ஆசிய நாடுகளுக்கு வழங்கியது. ரஷ்ய! நாட்டின் புரட்சித் தலைவரான லெனின், 1805 ஜனவரி 14 ' (1) அன்று 'For%ard" (Veperyod} என்ற சஞ்சிகையில், முன்னேறி வரும் முற்போக்கான ஆசியா, பின்தங்கிய , பிற்போக்கான ஐரோப் K. பாவுக்கு ஈடு செய்து.! முடியாத பலத்த அடியைக் கொடுத்துவிட்டது: என் 16 எழுதினர். {L.enin's Coliscted. Worlks, "The Fall of Fort" Arth:12. தொகுதி 3. பக். 43). ஜப்பான் பெற்ற வெற்றி இந்தியாவிலும் மக்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஊட்டியது. காந்தியடிகளின் நண்பராக விளங்கிய பூஜ்யர் சி. எப். ஆண்ரூஸ், தூரத் தொலைக் கிராமங் களிலும் கூட, கிராமவாசிகள் இரவில் வட்டமிட்டு அமர்ந்துகொண்டு, ஹக்காவை ஒருவருக்கொருவர் கை மாற்றிப் புகைத்துக்கொண்டு, ஜப்பான் பெற்ற வெற்றியைக் குறித்துப் பேசினர். அவர்களில் முதியவரான ஒருவர், 'சிப்பாய்க் கல்கத்துக்குப் பின்னர் இத்தகைய ஒரு நிகழ்ச்சியை நான் கண்டதில்லை என்று என்னிடம் கூ. 2 னார்' என்று எழுதினார், (மேற்கோள் Modern Religions Movements in India--1. N. Farquhar. பக். 361). பண்டித ஜவாஹர்லால் நேருவும் கட, தமது உலக வரலாறு என்ற நூலில், நாம் சிறுவனாக இருந்த போது, ஜப்பானிய வெற்றிகளைப் பற்றிய செய்திகளை அறிந்து நான் எவ்வளவு பரவசமடைந்தேன் என்பது எனக்கு நிலை விருக் ' கிறது என்று எழுதியுள்ளார். {Glimpses of World History) இவ்வாறு ரஷ்ய-~ஜப்பான் யுத்தத்தில் ஜப்பான் பெற்ற வெற்றி இந்தியாவில் தேசிய இயக்கம் எழுச்சியுற்றுத் தீவிரத் தேசியவாத இயக்கம் தோன்றுவதற்கு ஒரு புறக்காரணியாக விளங்கியதைப் போலவே, ரஷ்யாவின் தோல்வியைத் தொடர்ந்து உடனடியாக, 1905 ஆம் ஆண்டில் ரஷ்ய நாட்டில் வெடித்த முதல் ரஷ்யப் புரட்சியும் அதற்கு மற்றொரு காரணியாக விளங்கியது. 1905 ஜஹாவரி 22ல் தொடங்கி, 19437ல் முடிவுற்ற இந்தப் புரட்சி, ரஷ்ய அரசாங்கத்தின் பயங்கரமான அடக்குமுறையாலும், பிற காரணங்களாலும் தோற்று விட்டபோதிலும்கூட, இந்தப் புரட்சியின்போது ரஷ்! 1.பிக்கள் காட்டிய வீரமும் தீரமும் ஏனைய நாட்டு மக்களுக்கு, குறிப்பாக