பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகக் கூறுகள் iði அடிகளது துறவின் சிறப்பினைப் புகழ்ந்துரைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் யாவும் தெய்விகக் கூறுகள் அடங்கியவை யாகும். இராமாயணத்தில் இந்தத் தெய்விகக் கூறுகள் இல்லா மல் கதை நடைபெறுவதில்லை. காவிய நாயகன் இராமனே திருமாலின் அவதாரமாகவும் சீதாப்பிராட்டி பூமிப்பிராட்டி யின் அவதாரமாகவும் சருதப் பெறுகின்றனர். புத்திர காமேஷ்டி வேள்வியின் பயனால்தான் தசரசனுக்கு மகப்பேறு உண்டாகின்றது தேவர்கள் வானரங்களாகப் பிறக்கின்றனர். இந்திரன் கூறாக வாலியும், கதிரவன் கூறாகச் சுக்கிரீவனும் வாயுபுத்திரனாக மாருதியும் அக்கினி தேவன் நீலனாகவும் பிறப்பெடுக்கின்றனர். அரக்கர்கள் யாவரும் கடவுளர்களின் வரங்களினால் புதிய ஆற்றல்களைப் பெறுகின்றனர். இராம ராவணப் போரில் தேவர்களால் அளிக்கப் பெற்ற அம்புகள் தொடுக்கப்பெறுகின்றன. மேகநாதன் இயற்றும் நிகும்பலை வேள்வி தெய்வக்கூறுகள் கொண்டவை. இங்ங்ணம் பல எடுத்துக்காட்டுகள் இராமகாதையில் நிறைந்துள்ளன. சிந்தாமணியிலும் இந்தத் தெய்விகக் கூறுகள் காணப் பெறுகின்றன. காந்தர்வ தத்தையார் இலம்பகத்தில் மக்களுடன் விஞ்சையர் தொடர்பு ஏற்படுகின்றது. வேறு சில தொடர்புகளையும் இக்காவியத்தில் ஆங்காங்குக் காணலாம். பெரிய புராணத்திலும் திருவிளையாடற் புராணத்திலும் இறைவன் சம்பந்தப்பட்ாத நிகழ்ச்சிகளே இல்லை. பாஞ்சாலி சபதத்தில் கண்ணன் இத்ெ தய்விகச் சக்தி யாகக் காட்சி அளிக்கின்றான். கோவிந்த நாமத்தின் மகிமை யால் திரெளபதியின் துகில் முடிவின்றி வளர்வது, கண்ண பிரானரு ளால்-தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்