பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் - திரெளபதி 45 பலவாறு அலற்றி அழுகின்றாள். திவேந்தன் - தனைக் கண்டு, இத்திறம் கேட்பல் யான் என்று பாண்டியன் அரண் மனையை நோக்கி வருகின்றாள், பாண்டியன் அவையில் இவள் தன்னை அறிவித்துக் கொண்ட திறமும், தன் சிலம் பின் தன்மையை எடுத்துக் காட்டிய திறமும் நம்மை வியக்க வைக்கின்றன. தன் கணவன் கள்வன் அல்லன் என்று மெய்ப் பித்த திறனைக் கண்டு இறும்பூது எய்துகின்றோம். இனி, திரெளபதியைக் காண்போம். திருதராட்டினது அழைப்பைத் தெரிவிப்பதற்காக இந்திரப் பிரத்தம் வரும் விதுரனை வரவேற்கும் கட்டத்தில் இவளை முதன்முத லாகக் காண்கின்றோம். குந்தி தேவியை விதுரன் வணங்கிய பின்னர் துருபதன் செல்வம் விதுரனை வணங்குகின்றாள். இதனைக் கவிஞர், குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக் கோமகன் கண்டு வணங்கிய பின்னர் வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம் வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி, அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும் ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை மந்திரந் தேர்ந்ததோர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றாள். |கோமகன்-விதுரன்; துருபதன் செல்வம்-திரெளபதி) என்ற பாடலில் காட்டுவர். இங்கு மிக அடக்கமான திரெள பதியைக் காண்கின்றோம். அடுத்து, பாஞ்சாலியை அருச்சுனன் தொடையின் மீது சாய்ந்து கொண்டு பரிதியின் எழிலைக் கண்டு களிக்கும் 5. டிெ. 1. 18: 120