பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 மனைமாட்சி சிறப்பதற்கு மகப்பேறு வேண்டும்! மகப்பேறு குறைவதனுல் வளங்குறைந்தா போகும்? வினைமாட்சி சிறப்பதற்குக் கல்விவளம் வேண்டும்! வெறுங்கையால் முழம்போடக் கூடுவதோ என்றும்? சினைமாட்சி சிறப்பதற்கு மருந்துணவு வேண்டும்! சிருர்பெருக்கம் அணைபோடா திருந்திடுமோ என்றும்? முனைமாட்சி சிறப்பதற்கோ ஓரிருவர் போதும்! மூடிடுவோம் கருவழியை! இதிலென்ன குற்றம்? சொல்லினிக்கச் செயலினிக்க மனையறத்தைப் பேணித் துடியிடையும் ஆளனுமாய் எதிர்கால வாழ்வை அல்லினிக்கப் படுக்கையிலே கதைபேசிக் கண்கள் அயர்கின்ற நேரத்தில் அழுகுரலைக் கேட்டால் இல்லினிக்கும் குழந்தைகள்மேல் பற்றுளமா தோன்றும்? இருகுழந்தைப் பெருவாழ்வு மனைக்கின்பச் சொத்து! மல்லினிக்கும்; வாழ்வினிக்கும்! கருவழியைத் துார்ப் (போம்! மனையினிக்கும்; நாடினிக்கும்; அழகினிக்கும் நீடே! O - நாள்: 3-8-1969. இடம்: புதுவை நகர மன்றம்-புதுவை மாநில சுகா தார-குடும்பநலத் திட்டத் துறையினரால் நடத்தப்பெற்ற குடும்பக் கட்டுப்பாட்டுக் கவியரங்கம். தலைவர்; அண்ணுமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளர், உளுந்துார்ப்பேட்டை திரு. சண்முகம், எம்.ஏ. குறிப்பு: கவியரங்க முடிவில், புதுவை மாநில ஆளுநர் மேதகு பி. டி. சாட்டி தலைமையில், புதுவை மாநில சுகாதார -குடும்பநலத் திட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு வ. சுப்பையா, புதுமைக் கவிஞர் வாணிதாசனருக்குப் பொன்னடை போர்த்திப் பாராட்டினர். w 1. மல்-வளப்பம்; வருவாய்.