இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
எனக்குப் பின் பலகவிஞர் பாடப்போ கின்றார்!
இனம் நாடு மொழிசமயம் இயலிசைகூத் தென்ற
தமக்களித்த தலைப்பினிலே தீந்தமிழில் பாடித்
தகுபுகழை நிலைநாட்ட வாருங்கள் என்றே
மனக்களிப்போ டழைக்கின்றேன்! அவர்பாடக் கேட்டே
வாயார வாழ்த்துங்கள்! வாழ்த்துகின்றேன் நானும்!
எனக்களித்த கவியரங்கத் தலைமைக்கு நன்றி!
எல்லார்க்கும் என் நன்றி! வாழ்க தமிழ் நீடே
11
◯
நாள்: 9–7–1960.
இடம்: திருச்சி நகரக் கலைக்கழக வெள்ளிவிழா.
தலைவர்: புதுமைக் கவிஞர் வாணிதாசன்.
குறிப்பு: குறிப்பிட்டபடி இவ்விழா ஏதோ காரண நடைபெறாது போனதால், இக்கவிதை எழுவோடு நின்றுவிட்டது.