பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு நூறு மைல்கள் தாண்டி இருக்கும் கடலை நோக்கியே அருமைத் தொண்டர் பலரும் சூழ ஐயன் கடந்து சென்றனர். தளர்ந்த வயதில் காங்தி யடிகள் தண்டிக் கிராமம் கோக்கியே தளர்வு சிறிதும் இன்றி கடந்தார், தடியை ஊன்றி ஊன்றியே. அறுபத் தோரு வயதில் கூட அண்ணல் விரைந்து கடந்திடும் அரிய காட்சி கண்டு மக்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். தண்டி தன்னில் உப்புக் காய்ச்சித் தடையை காங்தி மீறவே, எண்ணில் லாத தேசத் தொண்டர் இதுபோல் உப்புக் காய்ச்சினர். தடியால் அடித்துத் தொண்டர் தம்மைத் தாக்கி ர்ைகள் சேவகர். பிடித்துச் சிறையில் அடைத்து வைத்தும் பெரிதும் தொல்லை கொடுத்தனர். 122