பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமைகள் பெற்றிட வெள்ளேயரை ஒன்ருய் எதிர்த்த சகோதரர்கள் அருமையாம் விடுதலை கெருங்குகையில் ஐயோ, தமக்குள் அடித்துக்கொண்டார் : மனிதரை மனிதரே குத்துவதை, வாளில்ை வெட்டி வீழ்த்துவதை, புனிதராம் காங்திஜி கேட்டதுமே, புழுவெனத் துடியாய்த் துடித்தனரே. பெருமை மிகுந்தஇம் மண்ணினிலே பிறந்து வளர்ந்தவர் தங்களுக்குள் சிறிதுமே ஒற்றுமை யில்லாமல் சிந்திய ரத்தமும் கொஞ்சமில்லை : வங்காளம், பீகார் மாநிலத்தில் மக்கள் கலகம் அடங்கிடவே, அங்கெல்லாம் காந்தி கடந்தனரே. அல்லும் பகலும் அலைந்தனரே. ஊரில் கலகம் அடங்கிடவே உயிரையும் கூட மதியாமல், தீரமாய் வெறியர் மத்தியிலும் சென்றனர் அண்ணல் காங்தியுமே. 135