பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியைப் பற்றி தொடர்ந்து பதினன்கு ஆண்டுகளில் நான் எழுதிய பாடல்களையெல்லாம் அவ்வப்போது சேக சித்துத் .ெ த கு த் து, பிறகு தான் புத்தகமாக வெளியிட உதவியவர் என் இனிய நண்பர் திரு. ரத்னம் அவர்கள். குழந்தைகள் உள்ளம் க வ ரு ம் வகையில் அழகான ஒவியங்களை வரைந்து தந்தவர் தமிழகத்தின் சிறந்த ஒவியர்களில் ஒருவரான திரு. சாகர் அவர்கள். இப் புத்தகம் நல்ல முறையில் அச்சாகி வெளிவரப் பல்வகையிலும் உதவியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் திரு வெ. சுப. கடேசன் அவர்களும் திரு. ரத்னம் அவர்களு iÊf; $i FF , இவர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 'காந்தி நூற்ருண்டு விழாவில் இந்நூலின் முதற் பதிப்பைச் சிறுவருக்கு வழங்கும்படியான வாய்ப்புக் கிடைத்தது. அதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந் நூலுக்கு மத்திய அரசினர் பரிசளித்துப் பாராட்டினர். அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்நூல் சிறுவர் உலகுக்கு ஓரளவாவது பயன்படு மாயின் என் மகிழ்ச்சி பன்மடங்காகப் பெருகும். குழந்தைகள் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள். 'உமா இல்லம்’ ஏ. எல். 183, அண்ணுநகர். அழ. வள்ளியப்பா சென்னை. 40 12