பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியுகக் கவிஞர் உயர்திரு. காமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாழதது மாந்தர்கள் உலகினிலே-எங்கும் மகிழ்வுடன் குலவிடவும் போர்பயம் நீங்கிடவும்-மனிதப் பொறுப்புகள் ஓங்கிடவும் மதவெறி மொழிவெறியும்-மற்றும் இனவெறி அழிவுறவும் அன்பறம் செழித்திடவும்-கெட்ட அகந்தையை அழித்திடவும் சாக்த குணம்வேண்டும்-அத்துடன் சத்திய மனம்வேண்டும். அத்தகு நல்லறிவை-எளிதில் அளித்திட வல்லதெனும் - பள்ளிப் படிப்பினையே-இளைஞர்கள் பயின்றிடக் கொடுப்பதுவாய் கதைகளைச் சொல்வதுவே-மிக்க களிப்புள கல்வியதாம். அதற்குள சிறந்தகதை-காந்தி அண்ணல் பிறந்தகதை. காந்தியின் சரித்திரங்தான்-சிறந்த கல்வியை விரித்துரைக்கும்.