பக்கம்:பாட்டுத் திறன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாட்டுத் திறன். "பஞ்செரி யுற்ற தென்ன அரக்கர்தம் பரவை எல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்ட தில்லை அஞ்சினேன் அஞ்சி னேன்; அச் சிதையென் றமுதால் செய்த கஞ்சினால் இலங்கை வேந்தன் காளை இத் தகைய னன்றோ.' இப் பாடல் மேகநாதனை இழந்த மண்டோதரி புலம்புவ தாக அமைந்தது. "வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்காடி இழைத்த வாறோ? கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சாணகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?' இஃது இராவணனை இழந்த மண்டோதரி புலம்புவதாக அமைந்தது. இந்த இரண்டு பாடல்களிலும் கம்பகாடன் கற்பனையாக சிகழ்ச்சிகளைப் படைத்துக்கொண்டு அவற்றிற்கு இயைந்த உணர்ச்சி முழுவதையும் பெற்றுத் தன் அநுபவமாக்கிக் கொண்டு பாடியுள்ளான். கம்பகாடனுக்கு உண்மையில் இந்த அநுபவம் இருந்ததில்லை. கற்பனையால் உணர்ந்தே பாடினான். வாழ்க்கையின் அநுபவமாகப் பெற்ற உணர்ச்சியைத் திரும்பக்கொணர்ந்து கவிதையாகவடிக்கவல்லவரேகற்பனையில் பெறும் உணர்ச்சியையும் கவிதையில் தோய்த்துத் தரவல்லவர். மேற்கண்ட இரண்டு பாடல்களையும் காம் அவற்றிற்குரிய ஓசை யுடன் படிக்கும்பொழுது மண்டோதரியின் துயர்நிறைந்த உள்ளத்தை நன்றாக உணரமுடிகின்றது. கவிதையதுபவத்தை இங்ங்னம் பெறுதலே சரியான முறையாகும். ரிச்சர்ட்ஸ் கூறும் கவிதை யநுபவம் : ஒரு கவிதையைப் படிக்கும்பொழுது அஃது எங்கனம் அதுபவம் ஆகின்றது 48. இராவணன் சோகப். 53. 44. மண்டோதரி புலம்புது, 23.