பக்கம்:பாட்டுத் திறன்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 38? தோகையே உன்னைத் தொடமாட்டேன்-என்று இளைஞர்கள் சொல்வது இன்றைய இல்லறம்! 'வினையே ஆடவர்க்குயிர்' என்ற கொள்கையுடைய ஆடவர் கள் சங்ககாலத்தில் இருந்தனர். ஆடவன் பொருளிட்டிவந்து இல்லறம் நடத்த வேண்டுமென்பது சங்கப்புலவர்கள் நமக்குத் தரும் செய்தி. இன்றைய ஆடவர்கள் வரதட்சினையையே மூலதனமாகக் கொண்டு வாழ கினைப்பது தலை குனிய வேண்டிய சிலை. இளைஞருலகம் எப்போது திருந்துமோ? இங்கனம் உள்ளடக்கம் கொண்டவை புதுக்கவிதைகள். ‘மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்' ஞாலமுழுதும் கயங் தளந்ததைப்போல, புதுக்கவிஞர்கள் இன்று சமூகத்தில் நிலவும் கல்லவை கெட்டவை ஆகிய அனைத்தையும் அணைத்துக் காட்ட முயல்கின்றன. கவிஞர்களின் அநுபவமும் கம் அநுபவமும் ஒன்று போல் இருப்பதால் கவிதையதுபவம் உடனே பிறந்து விடுகின்றது. 24. குறுந், 185 - -. 25. திருவள். மாலை (ேபசனர்)