பக்கம்:பாட்டுத் திறன்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 389 என் மூதாதை ஒருவன் பராசக்தியிடம் வரம் கேட்டான் காணி நிலம் மாட மாளிகை தென்னங் தோப்பு அது இது என வேண்டி இறுதியில் ஒரு பத்தினிப் பெண்ணைக் கேட்டான் நான் கேட்டால் உன்னை மட்டுந் தான் கேட்பேன் உன்னைப் பெற்றால் உலகத்தில் உள்ள எல்லாம் பெற்ற மாதிரி தானே.” சங்க இலக்கியங்களில் காதல் பேச்சு வரையறைப்பட்டிருக்கும். ஒட்டப் பந்தயத்தில் கோட்டைவிட்டு விலகி ஓடாத வரையறை போன்றது. இது. பொங்கும் உணர்ச்சிக்குப் புதிய சொற்கால் வாய் அமைத்துக் கொள்ளும் போக்கிற்கு அங்கு வாய்ப்பில்லை. புதுக் கவிஞர்கள் இந்த வாய்ப்பினை அமைத்துக் கொள்ளு கின்றனர். நான் மகர யாழ் உன் மணிக்கரம் தீண்டினால் போதும் என்னால் உனக்குப் பெருமை வரும். உன்னால் எனக்கு வாழ்வு வரும். இக்கவிதையில் உணர்ச்சியின் சமத்துவம் விளக்கம்பெறுகின்றது. பொதுவுடைமைப் போக்கு ஓங்கி வரும் இக்காலத்தில் காதலி லும் சமத்துவம் புகுந்து கொள்வதைக் கண்டு மகிழ்வெய்து கின்றோம். 'முதலிரவு' என்ற தலைப்பில் காணப் பெறும் ஒரு கவிதை ஓர் அற்புதப் படைப்பு. இக்கவிதை மரபினை அதிகம் தழுவாது புதுமையைக் கொஞ்சிக் கொண்டு எழுந்ததாகும். தனித்தனியாம் ஆண்கட்சி 要 பெண்கட்சி இரண்டிற்கும் 8. புதுக் கவிதை முற்போக்கும் பிற்போக்கும் பக் 88, 4. ஒற்றை யடிப்பாதை பக். 21.