பக்கம்:பாட்டுத் திறன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாட்டுத் திறன் துரண்டுதலைத்-தூண்டல் என்றும், அத்துரண்டலுக்கு ஏற்ற வாறு நாம் மாறி சிற்பதைத் துலங்கல் என்றும் வழங்குவர் உளவியலார். இடி இடித்தல், மின்னுதல், மழை பெய்தல் போன்ற சூழ்நிலை தரும் தாக்குதல்கள் தூண்டல்கள் எனப் பெறும்; திடுக்கிட்டெழுதல், குடை பிடித்தல் போன்ற கும் கிலைக் கேற்றவாறு மாறி கிற்கும் செயல்கள் யாவும் துலங்கல் களாகும். தூண்டல் அகத்தேயுள்ளதாகவும் இருக்கலாம். பசி எடுத்தால் உணவினை உட்கொள்ளுகின்றோம். பசி யெடுத்தல் அகத்தேயுள்ள தூண்டல், புசித்தல் துலங்கல், மேனாட்டுத் திறனாய்வு நூல்களையெல்லாம் படித்தால் பல கருத்துகளைப் பெறலாம் எனச் சிந்திக்கின்றோம். இச் சிந்தனை அகத்தே தோன்றும் தூண்டலாகும். இங்ங்னம் உள்ளத்தின் செயல்கள் அனைத்தும், அவை இயக்கங்களாயினும், அன்றிப் புலனுணர்ச்சி களாயினும், அன்றி உள்ளக் கிளர்ச்சிகளாயினும் தூண்டலின் துலங்கல் என வழங்கப்பெறும். தூண்டல்களாகத் தோன்று பவை யாவும் சூழ்நிலையாகும். சூழ்நிலை தரும் தாண்டல் களுக்கேற்றவாறு நாம் துலங்குவதைப் பொருத்தப்பாடு? என்பர். சூழ்நிலை விளக்கம்: மேற்கூறிய செயல்கள் யாவும் நமக் கும் நம்முடைய சூழ்நிலைக்கும் இடையே நிகழ்பவை. இவ் விடத்தில் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். பொருள்கள் தாண்டல்களை விளைவித்தால்தான் அவை சூழ்நிலையாகும். பச்சைப் பட்டு விரித்தாலொத்த பச்சைப்பசேலெனத் தோன்றும் பரந்த பசும்புல்வெளி பசியோடு துடிக்கும் காய்க்கு வறட்சியான சூழ்நிலையாகும். அங்ங்னமே, குழிமுயல்கள் கிறைந்து கிடக்கும் புலம் பசுவிற்கு ஏலாத சூழ்நிலையாகும். நம்முடைய உடல் தேவைக்கு அல்லது உள்ளக் கவர்ச்சிக்கு முறையீடு செய்யும் பொழுதுதான் சூழ்நிலை பயனுடையதாகின்றது; அப்பொழுது தான் ஏதாவது ஒரு வழியில் எதிர்வினை’ புரிய வாய்ப்பு ஏற் படுகின்றது. படிப்பதில் அக்கறையே காட்டாதவர்கள் சென்ன்ைப் பல்கலைக் கழக நூலகம் போன்ற சூழ்நிலையிலிருப் பினும், அவர்கட்கு அச் சூழ்நிலை யாதொரு பயனையும் விளை விக்காது; பெருங் கவிஞர்களுடைய பாடல்களைச் சுவைக்க 20. Gurg5 #3ù un G-Adjustment. ?ł. . srĝřsåso sr-Reaction.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/52&oldid=813125" இலிருந்து மீள்விக்கப்பட்டது