பக்கம்:பாட்டும் கதையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காதைக் கடித்துவிட்டேன் அதல்ை பாவம் ஒன்றுமில்லை நிந்தை என்னைப் பேசாதீர் நீவிர்' என்ருன் பரமசிவம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பரமசிவம் ஒரு நாள் தன் வகுப்பிலிருந்து புத்தகம் ஒன்றைத் திருடிக் கொண்டுவந்து தன் தாயிடம் காட்டினன். தாய் அவனுடைய திருட்டுச் செயலைக் கண்டிக்காமல், பாராட்டிப் பேசிள்ை. இதனுல் பரமசிவத்தின் திருட்டுப் புத்தி வளரத் தொடங்கியது. பெரியவனைதும் பரமசிவன் பக்காத் திருடன் ஆகிவிட்டான். பல வீடுகளில் கன்னம் வைத்துத் திருடத் தொடங்கி விட்டான். ஒரு நாள் காவல் வீரர்கள், அவனைக் கையும் களவுமாய்ப் பிடித்து விட்டனர். கையில் விலங்கை மாட்டி நடு வீதியில் நாயைப்போல் இழுத்துச் சென்றனர்; கையிலிருந்த குண்டாந் தடியால் அவன் உடம்பு புண்ணுகும் வரை அடித்தனர். இக் கொடிய காட்சியைக் கண்ணுல் கண்ட பரமசிவத்தின் தாயார் ஐயோ! ஐயோ!' என்று அலறிக் கொண்டு அவன் பின்னல் ஓடி வந்தாள். பரமசிவம் தன் தாயை அருகில் 74