பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுருகாற்றுப்படை

7

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறியயர் களனுங்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்
சதுக்கமுஞ் சந்தியும் புதும்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

-திருமுருகாற்றுப்படை : 220-228

குறமகள் பூசனை செய்யும் முறை, பின்னர்க் குறிப்பிடப்படுகின்றது. ஆறுமுகப்பெருமானின் அடியவர்கள் தம் பத்திமைப் பாங்கு பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள்
பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருங் குரிசி லெனப்பல
யானறி யனவையி னேத்தி யானாது
நின்னளங் தறிதன் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி யுள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோயெனக்
குறித்தது மொழியா வளவையின்

-திருமுருகாற்றுப்படை : 271-281

அவன் அவர்களை ஆட்கொள்ளும் கருணைத்திறம், முதலியன குறிப்பிடப்படுகின்றன.

நெடுபெருஞ்சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவரு ளொருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை

-