பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாட்டும் தொகையும்

பாணரும் பெரும்பாணர் என்ற குறிப்பு திருத்தொண்டர் திருவந்தாதியிலும், பெரியபுரா வைத்திலும் விளக்கம் பெறு கிறது.

மேலும், அடியார்க்கு நல்லார் ‘பெரும்பாணர் ஆவார் குழலர், பாணர் முதலிய பெரிய இசைகாரர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் ஈண்டுக் கருதத்தக்கது. “பாணாறு’ என்றும் இப்பெரும்பாணாற்றுப்படை வழங்கப்பெறும் என்று தமிழ்த்தாத்தா உ. வே. சாமி நாதையர் அவர்கள் குறிப்பிட்டு, யாழின் வருணனை முதலியன இப்பாடலில் அறியப்படும் செய்திகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந் நூலின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவார். இவருடைய ஊராகிய கடியலூர் எங்கு இருக்கிறது என்று இதுகாறும் ஆராய்ச்சியால் புலனாகவில்லை. அ வ ரு ைட ய பெயர் உருத்திரங் கண்ணனாரா? அல்லது உருத்திரனாருடைய மகனார் கண்ணனாரா? என அறியப்படவில்லை என்பர் ஆராய்ச்சி யாளர். இவர் அந்தணர் மரபினர் எனக் கருதப்படுகிறது. மேலும் இவர் பெரும்பாணாற்றுப்படையில், அந்தனர் வாழும் மனையையும் அந்தணர் மகளிரின் கற்பினையும், அவர்கள் விருந்து புறந்தரும் முறையினையும் விளங்கக் கூறியுள்ளார்.

கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து அசைஇ,

-பெரும்பாணாற்றுப்படை : 315 - 316 என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் வைணவராய் இருந்திருத்தல் வேண்டும் என்பது,

இருநிலம் கடந்த திருமறு மார்பின்

-பெரும்பாணாற்றுப்படை : 29 எனத் திருமாலையும்,