பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வனத்தை உண்டாக்கினார். இம் மலர்களைக் கொண்டு மாலைகள் கட்டி இந்த ஊர்த் திருமாலுக்குச் சாத்தி மகிழ்வார். பூ மாலை கட்டுவதுபோல் பாமாலை கட்டு வதிலும் இவரது அவா எல்லை கடந்து நின்றது. எம்பெருமானுக்குக் கொஞ்சும் தமிழால் பிள்ளைத் தமிழ்ப் பாடித் தந்த பெருமையை இவரிடம் காண்கின்றோம். கண்ணனைப் பச்சைப் பசுங்குழவிப் பருவத்திலிருந்து உருப்படுத்தி உலகிற்கு விட்ட பெருமை இப் பெரியாருக்கே உரியது என்று கூறின் அது மிகையன்று. இவர் இயற்றிய சொல்மாலைகளைச் சிந்திக்கின்றோம். இவருடைய கற்பனையில் கண்ணன் திருக்கோட்டியூரில் திருவவதரிக்கின்றான்". இவர் தூயநா கண்ணனுக்கு நீராட்டுகின்றது; மருந்துாட்டுகின்றது. அவன் வயிற்றில் அடங்கிக் கிடக்கும் ஈரேழு உலகங்களையும் அவர் கண்கள் கண்டு களிக்கின்றன. இவர் தத்துவப் பொருள் நிறைந்த கண்ணனின் இளமை விளையாட்டுகளைப் பலர் முன் நிறுத்தி அவர்களை ஆநந்த வாரிதியில் ஆழ்த்தும் வன்மை யைத் தமக்கே உரிமையாக்கிக் கொள்ளுவதை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். கண்ணனின் திருமேனி அழ கினைப் பலருக்கும் காட்டித் தாய்நிலையிலிருந்து கொண்டு தாமும் அநுபவித்துக்களிப்பதையும் காண்கின்றோம்'. தம் கண்ணன் திருக்கோட்டியூரில் தோன்றிய காலத்தில் அவ்வூரின் ஆரவாரத்தையும் பெண்களின் குதுகலிப்பையும் தம் சொல்லோவியங்களில் காட்டி மகிழும் அருமைப் பாட்டினைச் சிந்திக்கின்றோம். இப் பெரியார், கண்ணன் திருவடி தொடங்கித் திருமுடிவரை அமைந்த உறுப்புகளின் அழிகின் பிழம்பைத் தாம் மட்டிலும் துய்த்து உவப்ப தோடன்றி அவ்வூர்ப் பெண்டிர் அனைவரையும் விளித்து விளித்து அவர்களையும் மகிழ்விக்கின்ற பெருமை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. இவர் கண்ணனை அம்புலிக்கு அறிமுகப்படுத்தி அதனை 10. பெரியாழ். திரு.1.1 11. 4ை. 1.2