பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV இறையன் பிலும் மெய்ப்பொருள் கருத்துகளிலும் ஆழங்கால் பட்டு நிற்பவரும் பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற பொன்மொழிக்கு இலக்கியமாகத் திகழ்பவருமான இப் பெரியாரின் அணிந்துரை இந் நூலின் பெருமையை உயர்த்துகின்றது என்பது என் திடமான நம்பிக்கை. அணிந்துரை அருளிய பெரியாருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி என்றும் உரியது. வைணவ உலகில் திருவரங்கம் ரீமத் ஆண்டவன் சுவாமிகளை அறியாதார் இலர். இராமாநுசர் காலத்தில் திருவரங்கத்திலிருந்த பக்தி சூழ்நிலையை இன்று அத் திரு நகரில் நிலவும்படிச் செய்தவர் இவர். குருகூர்ச் சடகோபன் அருளிச் செயல்களின் சாற்றினை நான் மறைகளின் தேனுடன் குழைத்து பக்த கோடிகட்கு அமுத தாரை போல் வழங்கி வரும் ஞானச் செல்வர். நாடு முழுவதும் கால் நடையால் யாத்திரை செய்து சமய ஒளிபரப்பி வரும் சீலர். உபநிடத முனிவர்போல் நமக்கெல்லாம் காட்சி தரும் இப் பெரியார் பொன்னார் திருவடிகளில் இந் நூலை அன்புப் படையலாக்குகின்றேன். அன்னாரது ஆசியால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும், ஆசாரியர்களின் உரைகளிலும் எனக்குத் தெளிவும் பக்தியும் மேலும் மேலும் பெருகும் என்பது என் திடமான நம்பிக்கை. இந்த நூலை யான் எழுதிவெளியிடுவதற்கு என்னுள்ளே தோன்றாத் துணையாக நினறு எனக்கு எல்லா நலன் களையும் ஈந்து என்னை இயக்கி நன்னெறிப் படுத்தும் திருவேங்கட முடையானை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி இறைஞ்சி வணங்குகின்றேன். ஏன்றேன் அடிமை; இழிந்தேன் பிறப்பு இடும்பை; ஆன்றேன் அமரர்க்கு அமராமை; ஆன்றேன்-- கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு, மேலை இடம் நாடு காண, இனி. --திருமழிசையாழ்வார். 」標露 | ந. சுப்புரெட்டியார். 4. நான். திருவந்-95.