பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கோட்டியூர் எந்தை 'திருக்கோட்டியூர் என்றாலே வைணவ பரமா சாரியாரான இராமாநுசரின் பெருங்கருணை நினைவிற்கு வரும்; நல்லார் பொல்லார் என்று பாராது எல்லார் மாட்டும் கருணை கொண்டு கோயிலின் மதில்மேலிருந்து கோண்டு திருமந்திர தானத்தை’-திருமங்கையாழ்வார் எக்களிப்புடன் பாராட்டும் நலந் தரும் சொல்லை?-வாரி வழங்கிய மாமுனி அன்றோ இவர்? இந்தக் கருணைப் பெருஞ் செயலை நினைத்து, காரேய் கருணை இராமாநுசா! இக்கட லிடத்தில் ஆரே அறிபவர் கின் அருளின் தன்மை?' என்று திருவரங்கத்து அமுதனார் பாராட்டுகின்றதையும் நாம் அறிவோம். குருவும், சீடரின் செயலையும் தேர்த் தட்டிலிருந்து கொண்டு பலர் காதிலும் விழும்படியாகப் பார்த்தனுக்குக் கீதை அருளிய கருணைக் கடலின் செயலையும் ஒப்பிடுகின்றார். உடனே எம்பெருமானாரே!! என்று அழைத்து அவரைக் கட்டித் தழுவுகின்றார். பரம வைதிக சித்தாந்தம் என்று பெயர் பெற்றிருந்த வைணவ தரிசனம் இன்று முதல் எம்பெருமானார் தரிசனம்: என வழங்குவதாகுக!' என்று ஆசியும் கூறுகின்றார். இங்ங்னம் தான் அறப் பெய்து மாயும் தடமுகில் என்று வருணிக்கப்பெறும் இராமாநுசரின் செயற்கருஞ் 1. இராமா. நூற்-25 பா. தி-1