பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை § (கூட்டமாகச்) சேர்ந்து ஆலோசனை செய்த இட மாதலின் இதனைக் கோட்டியூர் என்று வழங்குகின்றனர். 'திரு என்ற அடையுடன் இவ்வூர் திருக்கோட்டியூர்” என்ற திருநாமம் பெற்று வழங்கலாயிற்று என்பதாக அறிகின்றோம். இக்காரணம்பற்றியே இத்தலத்தில் மும்மூர்த்திகளும் காட்சி அளிக்கின்றனர். பெயர்க்காரணம் காண்பதில் நம் யுக்தியும் செயற் படுகின்றது. திருக்கோட்டியூர் என்பதைத் திருக்கு - ஒட்டி+ ஊர் எனப்பிரித்து பிறவியில் செய்த வினை களை + நீக்கும் எம்பெருமான்--கோயில் கொண்டுள்ள தலம்’ என்று நம் மனம் எண்ணிப் பொருள் காண்கின்றது. மேலும், கோட்டம் - கோயில்'; கோயிலையும் விமானத் தையும் கொண்ட ஊர்' என்று பொருள் கொள்ளவும் முயல்கின்றது. இன்னும், கோஷ்டி + கூட்டம்; வித்துவான் கள் கூட்டம் நிறைந்திருக்கும் ஊர்” என்றும் பொருள் காணவும் முற்படுகின்றது. பேருந்தில் வந்து கொண்டிருக்கும்போதே ஊரின் நீர்வளம், நில வளத்தைக் கண்ணுறுகின்றோம். ஊரின் நாற்புறமும் உள்ள எண்ணற்ற பாசனக் கண்மாய்கள் இவ்வளங்கட்குத் துணை செய்கின்றன. ஊரின் இயற்கைச்சூழல் ஆழ்வார் பாசுரங்களை நினைக்கத் துாண்டுகின்றது. பெரியாழ்வார்,

சீதகீர் புடைசூழ்

செழுங்கழனியுடைத் திருக்கோட்டியூர்” [சீதநீர்-குளிர்ந்த நீர்; புடைசூழ்-சுற்றிலும் சூழப் பெற்ற, கழனி-வயல்.) என்றும், திருமங்கையாழ்வார், 2. பெரியாழ், திரு. 4,4:11