பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருப்புளிங்குடிக் காய்சின வேந்தன் ஆன்மாக்களுக்கு ஈசுவரன் ஒருவனே உண்மை இரட்சகன். ஒரு காரணத்தாலன்றி, இயல்பாகவே அமைந்த எல்லா உறவுமாய், எக்காலத்திலும் கை விடாமல் கண்ணும் கருத்துமாய் நோக்கிக்கொண்டு போகும் பகவானே உயிர்களை இரட்சிக்கும் வன்மை வாய்ந்தவன். இவனை நிருபாதிக பந்து என்று சாத்திரங்கள் வழங்கும். இவனே ஆபத் பந்துவுமா வான். எம்பெருமானையொழிந்த பெற்றோர், சுற்றத் தினர் முதலியவரும், வேறு தேவர்களும் உண்மை இரட்சகர் ஆகார். இவர்கள் பூர்வகன்மம் முதலிய சில காரணங்களினால் உறவினராயும், நமக்கு ஆபத்து வந்த காலத்தில் அஞ்சி ஒதுங்கி நிற்பவராயும் இருக்கும் பெற் றோரும், மற்றத் தேவர்களும் உயிர்களைக் காக்கும் வன்மை வாய்ந்தவர்கள் ஆகார். இவர்களைச் சாத்தி ரங்கள் ஒள பாதிக பந்துக்கள்’ என்று பேசும், இந்த ஒளபாதிக பந்துக்களின் குணங்களைப் பற்றி தம்மாழ்வார் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். 'துணையும் சார்வும் ஆகு வார்போல் சுற்றத் தவர்.பிறரும் அணைய வந்து ஆக்க முண்டேல் அட்டைகள் போல்சுவைப்பர்: 1. திருவாய் 9.1:2 பா. தி-15