பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 247 நோக்கினமையைப் பேசுகின்றாள். கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே,' என்று பாண் பெருமாள் அநுபவித்தவாறு இவளும் அதுபவித்து அத்திருக்கண்களின் நீர்மையை நினைத்தவாறே இவளு டைய கண்கள் நீர்மல்க நிற்கும் நிலையை எடுத்துக் காட்டுகின்றாள். நின்று நின்று குமிறும் நெஞ்சின் நினைவை வாய்விட்டுச் சொல்ல மாட்டாத இன்னாப்பாலே உள்ளே குமிறா நின்றாள். குமிறும் என்று பதம் பிரிக்காமல் நின்று நின்று உகும் இறும்) என்று பிரித்து 'உகும்-நீர்ப் பண்டமாக நின்றாள்; இறும் தளர்ந்து விழுகின்றாள்' என்று சிலர் பொருள் கூறினார்களாம். அது சுவையற்றதென்று மறுக்கப்பட்டதை ஈட்டாசிரியர் குறிப்பிடுகின்றார். ஈடு: ராஜ கோஷ்டியிலே 'உகும் இறும்’ என்று பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன் அங்ங்ணல்ல; கன்றைக் கடக்க வைத்தால் முலைக் கண் கடுத்துப் பசு அலமந்து படுமாப்போலே உள்ளோடு கின்ற கிலேசம் வாய்விட மாட்டாதே நேசவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ? என்றான். பெருவெள்ளத் தில் சுழிக்கும்ாப் போலே அகவாயிலுள்ளது வெளியிட மாட்டாதே உள்ளே நின்று சுழிக்கிறபடி. அடுத்து, பராங்குச நாயகி திமிர்கொண்டாற்போல் தேவபிரான் தேவபிரான்’ என்று நெளிந்த வாயோடு கூடி கண்கள் நீர்மல்கப்பெற்று கட்டுக் குலைந்து தளர்ந்திருக் கும் நிலையையும் நினைவு கூர்கிறோம். 'திமிர்கொண்டாலொத்து கிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரானென்றே கிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே,' T15. அமலனாதி-8 16. திருவாய் 6. 5 ; 2