பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

157


வினவினான் படகோட்டி அம்பலவன் வேளான்.

“அப்பா! அதை இப்போது உன்னிடம் உறுதியாகச் சொல்லி விட முடியாது. ஒரு தினுசாக எனக்குள் தீர்மானித்திருக்கிறேன். படகைக் கொண்டு போனவர்கள் யாராக இருக்கலாம் என்பது பற்றிப் பின்பு ஆராயலாம். су і пr | முதலில் மகாமண்டலேசுவரரிடம் போய்ப் படகு காணாமற்போன செய்தியைத் தெரிவிப்போம்” என்று கூறி வேளானையும் உடன் அழைத்துக் கொண்டு திரும்பினான் சேந்தன்.

சிவ பூஜை செய்துவிட்டு நிர்மலமான மனமும், உடலுமாக மாளிகை வாசலில் வந்து நின்ற இடையாற்று மங்கலம் நம்பிக்கு நாராயணன் சேந்தன் வந்து கூறிய செய்தியைக் கேட்டதும் சஞ்சலமும், சிந்தனையும் உண்டாயிற்று. “வல்லாளதேவன் காலைவரை தங்கியிருந்து தன்னோடு உடன் புறப்படுவதாகச் சொல்லியிருந்தும் அம்மாதிரி மோசம் செய்வானா?” என்று சிரித்தார். ஒரு வேளை அப்படியே அவன் புறப்பட்டுப் போயிருந்தாலும் கோட்டையைத் தவிர வேறெங்கே போயிருக்க முடியும்? போனதை ஒரு குற்றமாகச் சொல்லிவிட முடியாது. போகும்போது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போயிருக்கக் கூடாதோ? என்று சமாதானமும் அடைந்தார். தளபதி இல்லாவிட்டால் என்ன ? படகுக்குச் சொல்லியிருந்த நேரத்தில் வேளானை வரச் சொல்லி நாராயணன் சேந்தனையும் உடன் அழைத்துக்கொண்டு நாம் தனியே புறப்பட வேண்டியது தான் என்று தமக்குள் அவர் ஒரு முடிவுக்கு வந்தபோது அம்பலவன் வேளானும், நாராயணன் சேந்தனும் வந்து, படகு காணவில்லை என்ற அந்தச் செய்தியைக் கூறினார்கள். அவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். வேறு படகுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.


18. தென்னவன் ஆபத்துதவிகள்

இன்னவென்று புரியாத எண்ணங்களாலும், அந்த இரவில் இடையாற்று மங்கலம் மாளிகையில் நடந்த எதிர்பாராத சில