பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

“நாங்கள் இருவரும் சோழநாட்டினர். எங்கள் நாட்டிலும் புகார்த்துறைக்கு அருகில் சில இடங்களில் முத்துக் குளிக்கிறார்கள், தெரியுமா?”

“தெரியும்! சோழநாட்டு முத்துக்களை என்றுமே உலகம் முத்துக்களாக ஒப்புக்கொண்டதில்லை. எங்கள் கொற்கைதான் உலகம் போற்றும் முத்துச்சலாபம். இதை நீங்கள் மறுக்க முடியாது."— சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்துக் கொஞ்சம் ஏளனமாகச் சிரித்துவிட்டான் கரவந்தபுரத்துச் சிற்றரசன். அது அந்த இருவருக்கும் பொறுக்கவில்லை.

“இதே கொற்கைப் பகுதி இதற்கு முன்பும் பலமுறைகள் சோழநாட்டு ஆட்சிக்கு உட்பட்டதுண்டு. இனிமேலும் அப்படி ஆகாதென்று யார் சொல்ல முடியும்? அதை நீங்கள் மறந்து பேசுகிறீர்களே”

பெரும்பெயர்ச் சாத்தனுக்குச் சினம் மூண்டது “நீங்கள் முத்து வாணிகத்துக்கு வந்திருக்கிறீர்களா? அல்லது அரசியல் பேசி வம்பு செய்ய வந்திருக்கிறீர்களா?” என்று ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் அவன்.

பெரும்பெயர்ச்சாத்தனது சுடுசொற்களைக் கேட்டதும், இருவரும் கதிகலங்கிவிட்டனர். தங்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற கவலை அவர்களைப் பிடித்துக்கொண்டது. அவசரக்கோலம் அள்ளித் தெளித்த கதையாக அங்கிருந்து நழுவிவிடுவது என்று சமிக்ஞை மூலம் திட்டமிட்டுக் கொண்டனர். அது இன்னும் சந்தேகத்தை விளைவித்துவிடுமே என்று அப்பொழுது அவர்களுக்குத் தோன்றவில்லை. எனவே, அந்த இருவரும் வாணிகர் கூட்டத்திலிருந்து வெளியேறி மெல்ல நழுவி விட்டனர். அவர்கள் நடந்துகொண்ட முறையையும், சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிட்டதையும் காணப் பெரும்பெயர்ச்சாத்தனின் சந்தேகம் வலுத்தது. தன் அருகில் நிறை மானகவசன்” என்னும் மெய்க் காவலனை அழைத்து, இருவரையும் அவர்களுக்குத் தெரியாம்ல் பின்பற்றிச் சென்று கண்காணிக்குமாறு இரகசியமாகச் சொல்லி அனுப்பினான். அவனுடைய மனத்தில் பலத்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டுப்