பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


கொண்டு தூங்கும் சிறு பிள்ளையைப் போன்றல்லவா இருக்கிறது இது?"- அவர் நினைத்தார். . -

“இந்தச் சங்கு எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டுமா! கப்பல் ஆடும்போது உருண்டு எங்கேயாவது போய்விடுமே. நான் இதை உள்ளே கொண்டு போய் வைத்துவிடுகிறேன்” என்று சிரித்துக் கொண்டே குனிந்து அதைக் கையில் எடுக்க முயன்றார் அவர். -

‘'வேண்டாம் ! அது இங்கேயே இருக்கட்டும் !’ படுத்திருந்தபடியே அவருடைய கைகளை மறித்துத் தடுத்து விட்டான் அவன். .

“சரி! தூங்குங்கள்” இப்படிச் சொல்லிவிட்டு நடந்தவர் எதையோ நினைத்துக் கொண்டவர் போல் மறுபடியும் அவனருகே வந்து முழங்கால்களை மடித்து மண்டியிட்டு அமர்ந்தார். இளவரசனின் மார்பை மூடியிருந்த பட்டு அங்கியை விலக்கி வலது கையால் தொட்டுப் பார்த்தார். பின்பு நெற்றியிலும் கையை வைத்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் கவலை வந்து குடிபுகுந்தது. - - “கண்கள் எரிச்சலாக இருக்கின்றதா? உங்களுக்கு”

இ ఫి. என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான்

ராசசிம்மன்.

“நீங்கள் கவனமாயிருக்க வேண்டும்! கடற்காய்ச்சலை இழுத்துவிட்டுக் கொண்டு தொல்லைப்படக் கூடாது.” அவர் எச்சரிக்கை செய்துவிட்டுப் போனார். நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. “தலைமுறை தலைமுறையாக உரிமை கொண்டாட வேண்டிய முடியையும் வாளையும் சிம்மாசனத்தையும்கூட இப்படிப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாதுகாக்கத் தெரியவில்லை. கப்பலின் ஒரு மூலையிலுள்ள அறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றன. அவை. ஏதோ ஒரு தீவில் எவளோ ஒரு பெண்ணிடம் விலைக்கு வாங்கிய இந்தச் சங்குக்கு இவ்வளவு யோகம், புதுப்பொருள்