பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


அப்பா! உன்னை வரவழைத்த காரியம் மிக அவசரம். அதற்கு நீ தயாராக இருப்பாய் என்றே நினைக்கிறேன்” என்று கூறினார்.

‘மகாமண்டலேசுவரரின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதற்கு அடியேன் தயாராக இருந்துதான் ஆகவேண்டும்.”

“கட்டளை இருக்கட்டும். அதற்கு முன்பு வேறொரு எச்சரிக்கை நீயோ மெய்க்காவற்படைத் தலைவன்; மெய்க் காவலனுக்கு மெய்யைக் காக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்போது நான் கூறபோகும் மெய் உன்னையும், என்னையும், தவிர்த்துப் புறம் போகக்கூடாத மெய். ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கப்போகிற மெய்.”

“புறம் போகக் கூடாதென்பது தங்கள் விருப்பமாயின் அப்படியே மனத்தில் பாதுகாத்துக் கொள்வேன்.”

“நல்லது! ஏற்பாட்டைச் சொல்லட்டுமா?” “சொல்லுங்கள்” ‘பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்தவர்களாகவும், எங்கும், எந்த விதத்திலும் வேடமிட்டு நடிக்கத் தெரிந்தவர்களாகவும், உயிருக்கு அஞ்சாதவர்களாகவும், ஒர் ஐம்பது வீரர்கள் இப்போது உன்னிடமிருந்து எனக்குத் தேவை!”

அவரையும், அவருடைய வார்த்தைகளையும் விளங்கிக் கொள்ள முடியாமல் திணறிப்போய் மருண்டு பார்த்துவிட்டுக் கேட்டான் ೨/ರ್ಮಿಿ -

o “ஐம்பது வீரர்க்ளா வேண்டும்?” “ஆம்! எண்ணி ஐம்பது பேர்கள் வேண்டும் எனக்கு.” “அரண்மனை மெய்காவற் படையினரில் இருந்துதான் ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு ஆட்கள் இல்லை!” *

“செய்! ஆனால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நான் கூறிய தகுதிகளுக்குப் பொருந்தியிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.”