பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


முதல் முதலாகக் கடலைப் பார்க்கும் சிறுபிள்ளையின் பிரமி ப்போடு மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றுகொண்டிருந்தான் அவன். -

“சீவல்லபா! நீ பச்சைக் குழந்தையில்லை. உன்னைக் கூப்பிட்டு உன் கையில் ஒரு முள்ளைக் குத்தி அதை இன்னொரு முள்ளால் எடுத்துக் காட்டி இவ்வளவு செய்த பின்பு தான் உனக்கு உண்மையை விளக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாயாற் சொல்லி விளக்கியிருந்தாலே உனக்குப் புரிந்திருக்கலாம். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்தேன், தெரியுமா? ஒரு கருத்தை மனத்தில் பதிக்க வேண்டுமானால் அந்தக் கருத்தின் நினைவு பசுமையாக இருக்கும்படி எதையாவது செய்துதான் ஆக வேண்டி யிருக்கிறது. குழந்தைத்தனமான காரியங்களானாலும் அவற்றைச் செய்துதான் சில மெய்களைப் புரியவைக்க முடிகிறது. இந்த மாதிரிக் குழந்தைத்தனம் இருப்பதால் தானே சத்தியத்தையும் தருமத்தையும் காப்பாற்றுவதற்காகச் சில அறிவாளிகள் கதையும், கவியும் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது? உன் கையில் முள்ளால் குத்தி விட்டதாக நீ என்மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே வா, போகலாம். நான் கூறியபடி நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் ஐம்பது பேர்களையும் போய்க் காண்போம். அவர்கள் காவற்படை மாளிகையில்தானே தங்கியிருக்கிறார்கள்?” என்று அவனை உடன் அழைத்துக்கொண்டு அரண்மனைக் காவற்படை மாளிகைக்கு விரைந்தார் மகாமண்டலேசுவரர்.

“சீவல்லபா: வடக்கு எல்லையில் கரவந்தபுரம், கொற்கைப் பகுதிகளில் ந்ம் பகைவர் உண்டாக்கும் கல்வரங்களையும், குழப்பங்களையும் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாம் அவர்களை எண்ணிப் பயமும், பதற்றமும் அடைவதற்காக உடனடியாகப் படையெடுப்பு நடக்க இருப்பது போல் ஒரு மிரட்டலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கன்னம் வைத்துத் திருடப்போகிற திருடன் தந்திர சாலியாக இருந்தால் கன்னத்துவாரத்துக்குள் முதலில் தன் தலையை நீட்டமாட்டான். உள்ளே சொத்துக்கு உரியவர் விழித்துக் கொண்டிருக்கிறாரா, இல்லையா என்று சோதிப்பதற்காக ஒரு குச்சியில் பழைய மண் சட்டியை மாட்டித் துவாரத்தின் வழியே நீட்டுவான்; ஆள்