பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

411


விழித்திருந்தால் அவன் நீட்டிய சட்டியைத் திருடனின் தலையாக எண்ணி உள்ளிருப்பவர் ஓங்கிப் புடைப்பார். சட்டி உடைகிற சத்தம் கேட்டுத் திருடன் ஒடித் தப்பித்துக் கொள்ளுவான். இது போன்ற வேலையைத்தான் வடதிசை அரசர்கள் இப்போதுநம் மிடத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றுமே அறியாமல் துரங்கிக் கொண்டிருக்கிறோமென்பது அவர்கள் நினைப்பு. வைரத்தை வைரத்தால் அறுக்கப் போகிறேன். முள்ளை முள்ளால் எடுக்கப் போகிறேன். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லப் போகிறேன். அவர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தை அவர்களுக்கே திரும்பக் கற்பிக்கப்போகிறேன். சிந்திக்கவும், சூழ்ச்சி செய்யவும், திட்டமிடவும் அறிவுள்ளவர்கள் தென்பாண்டி நாட்டில் கிடையாதென்று தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. சோழ நாட்டில் சோறு இருக்கிறது. சேர நாட்டில் யானைகள் இருக்கின்றன. பாண்டி நாட்டில் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இந்த நாவலந் தீவிலேயே சிறந்த அறிவாளிகள் தொண்டை நாட்டிலும், தென் பாண்டி நாட்டிலும் இருக்கிறார்கள். தொண்டை நாட்டு அறிவாளிகள் எதையும் மன்னித்துவிடும் இயல்புள்ள சான்றோர்கள். ஆனால், பாண்டி நாட்டான் பாதகத்தை மன்னிக்க மாட்டான். தென்திசை எல்லாத் தீமைகளையும் அழித்தொழிக்கும் காலனுக்குச் சொந்த மென்பார்கள். அதே தென்திசையில் தான் இப்போது நாமும் இருக்கிறோம்."-காரியங்களைக் கண் பார்வையிலேயே சாதித்துக்கொண்டு போகிற மகா மண்டலேசுவரர் அன்று மெய்க்காவற் படைத் தலைவனிடம் சற்று அதிகமாகவே பேசினார்.

நாட்டின் உயிர் நாடியான படைகளை ஆளும் பொறுப்புள்ளவர்கள் தம் மேற் சந்தேகப்படும்படியாகத் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மகா மண்டலேசுவரருக்கு ஒரு பயம் உண்டாகிவிட்டிருந்தது. தளபதி வல்லாளதேவன் மனத்தில் தம்மைப் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லையென்று அவரே அறிந்திருந்தார். ஆபத்துதவிகள் படைத் தலைவன் மகர நெடுங்குழைக்காதனுக்கும் அவர் மேல் ஓரளவு பகை இருந்தது. சீவல்லபமாறனையும் அப்படிப் பகைத்துக் கொண்டால் இந்த மூவருமே தமக்கு எதிராக ஒன்றுகூடி