பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

429


ஒளியால் அவனால் ஆளப்படும் நாட்டின் பல காதப் பரப்புக்குள்ளும் அவன் ஆணைகள், சட்டதிட்டங்கள் ஒழுங்காக நடப்பதற்குக் காரணம் என்ன ? அவன் ஆளுமிடம் எங்கும் அவனுடைய ஆற்றல் ஒளி காக்கிறது.

“உறங்குமாயினும் மன்னவன் தன்னொள் கறங்கு தெண்டிர்ை வையகம் காக்குமால்"என்ற சிந்தாமணியாசிரியர் கூறிய தொடர்தான் மகாமண்டலேசுவரரைப் பொறுத்தமட்டில் தளபதியின் தத்துவமாக இருந்தது. மாகமண்டலேசுவரர் தென்பாண்டி நாட்டின் மன்னர் இல்லை. ஆனால் இடையாற்று மங்கலத்திலோ அரண்மனையின் ஒரு மூலையிலோ இருந்து கொண்டு தம் எண்ணத்தின் ஒளியால் நாடு முழுவதும் காத்துக் கண்காணிக்க முடிகிறது. மந்திரவாதிகளுடைய கண் பார்வைக்கு எதிராளியைக் கட்டிவிடும். ஆற்றல் இருப்பதுபோல் அவரிடம் ஏதோ ஒரு அதீத ஆற்றல் இருப்பதாகத் தளபதிக்குப் பட்டது. கோட்டாற்றின் மாபெரும் படைத்தளத்தின் தலைவனாக இருந்தும் மகா. மண்டலேசுவரரின் அந்த ஈடு இணையற்ற சதுரப் பாட்டில் நாலில் ஒரு பங்குக.டத் தனக்கு வரவில்லையே என்ற புகைச்சல் அவனுக்கு உண்டாயிற்று.

கண்ணுக்கு மையெழுதும் எழுதுகோலைத் தொலைவில் இருக்கும்போது கண்ணால் பார்க்க முடிகிறது. அதே எழுது கோலால் மைதீட்டும்போது கண்களாலேயே அதைக் காண முடிவதில்லை. மகாமண்டலேசுவரரைக் காணாத ‘போது பொறாமையைக் கண்ட தளபதி அவரை நேரில் கண்டால் அவரது பெருமைதான் தெரிந்தது. r .

கொடி மரத்து மேடையில் நின்றுகொண்டு கண்பார்வையில் படுமிடம் வரை பரவியிருக்கும் அப் பெரும் படைத்தளத்தைப் பார்வையிட்டபோதும் மகாமண்டலேசு வரரைத்தான் அவன் நினைக்க முடிந்தது. தன் சிந்தனை அத்தனை பெரிய படைத்தளத்தையும் அந்த ஒரே ஒரு மனிதரையும் சமமாக நிறுத்துப் பார்ப்பது ஏனென்றே அவனுக்குப் புரியவில்லை. * * : . . .