பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“தயாரிக்கவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இந்த வேளையல்லாத வேளையில் உம்மையும் உமது மனைவியையும் சிரமப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. கைவசம் என்ன உணவு இருந்தாலும் அது போதும்!”

“கைவசம் ஒன்றும் வகையாக இல்லை. ஒரு நொடியில் அட்டிற்சாலையில் மடைப் பரிசாரகம் புரியும் பணிப்பெண்களை எழுப்பிவந்து அடுப்பு மூட்டச் சொல்லிவிடுகிறேன்.” - ... “

“அடுப்பு மூட்டச் சொல்வது இருக்கட்டும், கையில் என்ன உணவு இருந்தாலும் நாங்கள் உண்ணத் தயார். வகையாக வேண்டுமென்று இப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” - . . . . . . . .

மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கவில்லை, உண்மையாகவே கேட்கிறாரென்று அவனுக்கு அப்போது தான் விளங்கியது. . ... . . “தேவி! நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது? பொருத்திருந்து நாங்கள் தயாரிக்கும் அறுசுவை உணவை ஏற்றுக் கொண்டுதான் போகவேண்டும். வராதவர் வந்திருக்கிறீர்கள்” என்று கோதை பணிவான குரலில் முன்னால் வந்து வேண்டினாள். அவள் குரலில் ஆவல் கிளர்ந்து ஒலித்தது!

“நான் சாப்பிடவேண்டுமென்பதற்காகக் கேட்கவில்லை பெண்ணே! எனக்கு அது முக்கியமில்லை. பல்லக்குச் சுமந்து கொண்டு வந்தவர்களின் பசியை முதலில் தீர்த்துவிட வேண்டும்! அப்புறம் இந்தப் பெண் காலையிலிருந்து என்னிடம் சொல்லாமல் பட்டினி கிடக்கிறாள், இவள் பசியையும் தீர்க்க வேண்டும்!”

“நீரில் இட்ட பழையசோறும், புளிக் குழம்பும்தான் இருப்பவை. அவை இந்த நேரத்தில் வாய்க்குச் சுவையாக இருக்காது. தயவுசெய்து அடிசில் ஆக்கியே அளித்துவிட அனுமதிக்க வேண்டும்” என்று கெஞ்சினாள் கோதை, மகாராணி கேட்கவில்லை. இருந்த உணவே போதும் என்றார்.