பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


வார்த்தைகள் தடைப்பட்டு வந்தன. நெஞ்சு பலமாக விம்மித் தணிந்தது. சக்கசேனாபதி அதைக் கண்டு பயந்தார். அவனது நெஞ்சை மெதுவாகத் தடவி விட்டுக்கொண்டவாறே, “இளவரசே காய்ச்சல் உள்ளபோது இப்படி உணர்ச்சிவசப்பட்டுப் பேசவோ, நினைக்கவோ கூடாது. எதைப்பற்றியும் மனத்தைக் கவலைப்படவிடாமல் நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

“என்னால் அப்படி நிம்மதியாக இருக்க முடியவில்லையே? சக்கசேனாபதி முள்ளில் புரண்டுகொண்டு பஞ்சணையாக நினைத்துக் கொள்வதற்கு நான் யோகியாக இருந்தால் அல்லவா முடியும்? ஆசையும் பாசமும் ஆட்டிவைக்க ஆடும் சாதாரண மனிதன் தானே நானும் ? நான் செய்துவிட்டனவாக என்னாலேயே உணரப்படும் என் தவறுகள் நிழல்போல் என்னைச் சாடுகின்றனவே? இராசசிம்மன் மனவேதனையோடு இப்படிச் சொல்லியபோது அவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று சக்கசேனாபதிக்கு விளங்கவில்லை.

அவர்கள் இருவருக்கும் இடையே சில விநாடிகள் மெளனம் நிலவியது. இருந்தாற்போலிருந்து இராசசிம்மன் திடீரென்று குமுறி அழ ஆரம்பித்து விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். அவனை வேதனைக் குள்ளாக்கியிருக்கும் எண்ணம் என்னவென்று சக்கசேனாபதியினால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. உடலில் நோய் வேதனை அதிகமாகும்போது சில மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அசட்டுத்தனமாக வாய்விட்டு அழுது கொள்வதுண்டு, ‘குமார பாண்டியனுடைய அழுகையும் அந்த வகையைச் சேர்ந்ததுதானோ” என்று எண்ணி வருந்தினார்.

“இளவரசர் இப்படி வரவரச் சிறு குழந்தையாக மாறிக் கொண்டு வந்தால் நான் எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? எதற்காக, எதை நினைத்துக் கொண்டு இப்போது நீங்கள் அழுகிறீர்கள்? அவன் முகத்தருகே நெருங்கிக் குனிந்து விசாரித்தார் அவர். .

“இத்தனை நாட்களாக இடையாற்றுமங்கலம் மாளிகையில் போய் யாருக்கும் தெரியாமல் திருடனைப்போல்