பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவைக்கும் அழகு செம்பவழத் தீவில் இருக்கிறது. அந்த அழகுக்குப் பெயர் மதிவதனி,”

சக்கசேனாபதி மேற்கண்டவாறு உண்மையைக் கூறியதும், இந்த வயதான மனிதர் நம் மனத்தில் உள்ளதைச் சொல்லி விட்டாரே!’ என்று வெட்கமடைந்தான் இராசசிம்மன்.

‘ஏன் வெட்கப்படுகிறீர்கள் இளவரசே ? நான் உள்ளதைத்தானே கூறினேன்? சில மலைகள், சில நதிகளுக்குத் தொடர்ந்து தண்ணிரை அளித்துப் பல நிலங்களைக் காப்பது போல் இயற்கை சிலபேருக்கு அளவிடமுடியாத அழகைக் கொடுத்துப் பல கவிகளை உண்டாக்கிவிடுகிறது. பெண்களின் வனப்பும், மலைமகளின் வளமும் மலர்களின் மணமும், கடலின் பரப்பும் இல்லாமலிருந்தால் இந்த உலகத்தில் கவிதையே உண்டாகியிருக்காது. செம்பவழத் தீவில் சந்தித்த அந்தப் பெண்ணின் அழகு உங்களைக் கவியாக்கியிருக்கிறது.” “உங்கள் புகழ்ச்சியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், நீங்கள் சொல்வதுபோல நான் கவியில்லை.”

“நீங்கள் இல்லையென்று சொன்னால் எனக்கென்ன? என்னுடைய கருத்தின்படி அழகை உணரும் நெஞ்சின் மலர்ச்சி இருந்தாலே அவன் முக்கால் கவியாகிவிடுகிறான். நீங்களோ அந்த மலர்ச்சியை வார்த்தைகளாக்கி வெளிப்படுத்திவிட்டீர்கள்” என்று சக்கசேனாபதி தம்முடைய அபிப்பிராயத்தை வற்புறுத்தினார்.

அவருக்குப் பதில் சொல்லாமல் கையில் வைத்திருந்த வலம்புரிச் சங்கை மேலும் கீழுமாகத் திருப்பிப் புரட்டி வலது கை விரல்களால் மெல்ல வருடிக்கொண்டிருந்தான் இராசசிம்மன். ஒன்றிரண்டு முறை விளையாட்டுப் பிள்ளை ஆர்வத்தோடு செய்வதுபோல் அந்தச் சங்கை ஊதி ஒலி முழக்கினான்.

“போதும், நன்றாக இருட்டிவிட்டது. இவ்வளவு நேரம் காய்ச்சல் உடம்போடு கடற்காற்றுப் படும்படி இங்கு நின்றாகி விட்டது. உங்கள் பிடிவாதம் பொறுக்க முடியாமல்தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தேன். இனிமேலும் இப்படி நிற்பது