பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


எதிரொலி என் உள்ளத்திலும் உருவெடுத்துப் பேரொலி செய்கிறதே! இடையாற்றுமங்கலத்துப் பெண்ணாவது தன்னளவில் அதிகமாக ஏங்கியிருப்பாள். செம்பவழத் தீவின் செல்வியோ என்னையே ஏங்கச் செய்துகொண்டிருக்கிறாள். என் உயிரையே காப்பாற்றி எனக்கு வாழ்வு கொடுத்த பெண் அல்லவா மதிவதனி, சந்திரனுடைய ஒளியில் உலகத்துக்குக் குளிர்ச்சியளித்து மயக்குகின்ற மென்மையைப்போல் மதிவதனியின் சிரிப்பில் மாபெரும் காவியங்களின் அலங்கார நளினங்களை ஒளித்துக்கொண்டிருக்கும். ஏதோ ஒரு கவர்ச்சி இருந்து என்னை மயக்கிக்கொண்டிருக்கிறது. அவளுடைய மோகனச் சிரிப்பு வந்து முடியுமிடத்தில் இதழோரத்தில் அழகாகச் சுழி விழுகிறதே! அந்தச் சுழியில் என் உள்ளம் சுழலுகிறது. நான் செம்பவழத் தீவில் அந்தப் பெண்ணைப் பார்த்தபின் கவியாக மாறிவிட்டேனென்று சக்கசேனாபதி கூறியது எவ்வளவு பொருத்தமான வார்த்தை! அவர் அப்படிச் சொன்னபோது வீம்புக்காக அவரை மறுத்தேனே நான். உண்மைதான்! சில பெண்களின் கண்களும், சிரிப்பும், சில ஆண்களைக் கவியாக்கிவிடுகின்றன. தம்மை மோந்து பார்க்கும்போதே மேலான எண்ணங்களை உண்டாக்கும் ஆற்றல் சில பூக்களுக்கு உண்டு. சில பெண்களின் கண்ணியமான அழகுக்கும் இந்த ஆற்றல் உண்டு போலும், எண்ண அலைகளின் கொந்தளிப்பில் இராசசிம்மன் நெட்டுயிர்த்தான்.

அழகையும், கவிதையையும், அரசாட்சியையும், போரில் வெற்றி தோல்விகளையும் சேர்ந்து நினைத்தபோது அவனுக்கு ஒன்று தோன்றியது: “வீரனாகவும் தீரனாகவும் வேந்தனாகவும் வாழ்ந்து செல்வம் பெறுவதைவிட விவேகியாகவும், கவிஞனாகவும் வாழ்ந்து ஏழையாகச் செத்துப்போகலாம். பார்க்கப்போனால், எது செல்வம் ? எது ஏழைமை? நுண்ணுர்வும் அறிவும்தான் செல்வம், அவை இல்லாமல் இருப்பதுதான் ஏழைமை!

இப்படி எதை எதையோ எண்ணிக் குமுறிக்கொண்டு அந்த இரவின் பெரும்பகுதியைத் தூங்காமல் கழித்தான்